ஒரு நாள் உமாதேவி, ‘இவ்வுலக மக்கள் பிறப்பு, இறப்பின்றி முக்தி பெற வழி உள்ளதா என ஈசனிடம் கேட்டாள். ‘மார்கழி மாத அஷ்டமி அன்று சிவாலய பிரதட்சணம் செய்தால் அப்பலன் கிடைக்கும்’ என்றாராம் ஈஸ்வரன். இதை ஸ்கந்த புராணம் சொல்கிறது. மகாபாரத யுத்தம் நடந்ததும், கீதை பிறந்ததும் மார்கழி மாதத்தில்தான்.