உங்கள் குரல்
”கலி(ஃபோர்னியா)யுகப் பிரம்மாக்கள்” என்ற சிறுகதையின் ஓவியத்தை பாத்த உடனேயே சிறுகதை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. அந்த ரோபோட் எனக்கு முன்னால் வந்து விட்டது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது அருமையான சிறுகதை.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை
அருமையான ‘தலையங்கம்’. எந்த ஒரு நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் போற்றப்படுகிறதோ அந்த நாடுதான் முழுமையான ‘சுதந்திரம்’ பெற்ற நாடு. “பத்திரிகை சுதந்திரமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும்” என்ற வரிகள் மனதிற்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. மனநிறைவை தந்த “கல்கி” இதழின் தலைங்கத்திற்கு ஒரு ‘ராயல் சல்யூட்.”
– முத்துராமன், மதுரை
ஓவியர் ஸ்ரீதர் அவர்கள் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் வரைந்த ஓவியமும் பொன்மொழிகளும் படித்ததும் அந்த அப்துல் கலாமை நேரில் என்னிடம் பேசியது போல இருந்தது. தத்ரூபமான அழகான ஓவியம்.
– உஷா, மதுரை
முகநூல் பக்கத்தில் வந்த சுரேஷ் சுப்பிரமணியன் அவர்களின் செய்தியை படித்ததும் தமிழ் மொழியின் அருமையும் பெருமையும் ’நான் தமிழச்சி’ என்ற உணர்வு அதிகமாக வந்தது. “தமிழ் மொழி” என்பது நம் அம்மாவை போன்றது. அதனால் ”தமிழுக்கு கொடுப்பது என் அம்மாவுக்கு கொடுப்பதுபோல” என்ற துப்புரவு தொழிலாளியின் வார்த்தைகளைப் படித்த பிறகு, ”நாம் ஆங்கில வார்த்தைகளை மறந்து, தமிழ் அதிகம் உபயோகிக்க வேண்டும்” என்ற நல்ல உணர்வினை ஏற்படுத்தியது. மிகவும் அருமையான செய்தியைப் பிரசுரித்த கல்கிக்கு வாழ்த்துகள்.
– பிரகதாநவநீதன், மதுரை
2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றிருக்கும் பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முரடோவ் குறித்து தலையங்கத்தில் எழுதியதோடு, இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களை கெளவுரப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருந்தமானதாகும். மக்களாட்சியின் நான்காவது தூணாக செயல்படும் பத்திரிகையாளர்கள், ”தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகள்” என்பதோடு, மக்களுக்குக்காக களத்தில் நிற்பவர்கள் ஆவார்கள். பத்திரிகையாளர்களின் எழுதுகோல் மக்களின் செங்கோல்!
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்
அருள்வாக்கில் திருபாற்கடல் கோயிலுக்கு கிழவர் உருவிலே பெருமாள் வந்ததை படித்து அதிசயித்தேன். ’ஈசுவரன் வேறு, மஹாவிஷ்ணு வேறு இல்லை’ என்பதை விளக்கியது அற்புதம். திருபாற்கடலுக்கு சென்று பெருமாளை தரிசித்த திருப்தியை தந்தது கட்டுரை.
– நெல்லை குரலோன், நெல்லை
”அதிா்ச்சிகளும், ஆச்சா்யங்களும்” கவா்ஸ்டோாி ராஜமுத்திரை போல அமைந்திருந்தது. மேலும் உள்ளாட்சி தோ்தலில், மக்கள் கட்சிகளை முத்திரையால், கட்டம் கட்டியதை வாிசையாய், கட்சி ரீதியாய், இதைவிட நாசூக்காய் தரம்பிாித்து எழுதியதில் கல்கியின் முத்திரை தெள்ளத்தெளிவாய் புாிந்தது. பாராட்டுக்கள் கல்கியாரே.
– நாகராஜன், செம்பனார் கோவில்
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த “எங்கேயோ கேட்ட குரல்”, ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்திய படம்.
இயக்குனர் ஆர்.சி.சக்தி கூட ரஜினி ’ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களைச் செய்ய வேண்டும்’ என தன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தது என் நினைவிற்கு வந்தது.
– ஸ்ரீகாந்த், திருச்சி