ஒரு வானம், ஒரு நிலவு, ஒரு சூரியன், ஒரு கல்கி!

ஒரு வானம், ஒரு நிலவு, ஒரு சூரியன், ஒரு கல்கி!

– எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்

மரர் கல்கி ஒரு அதிசய மனிதர். 20ம் நூற்றாண்டு ஒவ்வொரு துறைக்கும் ஒரு உதாரண புருஷர்களைக் கொடுத்தது. ஆன்மீகத்துக்கு காஞ்சி பெரியவர், அரசியலுக்கு மகாத்மா காந்தியடிகள், கவிதைகளுக்கு பாரதியார், நேர்மைக்கு காமராஜர். அதுபோல, எழுத்தாளுமைக்கு அது கல்கியைதான் அளித்தது.

ஒரு எழுத்தாளனின் படைப்பு ஒரு முறை வாசிக்கப்பட்டால் அதுவே பெரிதென்று கருதுவது இக்காலம். சில முறை வாசிக்கப்பட்டால் அது அதிசயம். எத்தனை முறை வாசித்தோம் என்பதே தெரியாதபடி வாசித்திருந்தால் அது கல்கியின் படைப்புகளாகத்தான் இருக்கும். சரித்திரம், சமூகம் என்று புதினங்களிலும், கட்டுரை, விமர்சனம் என்று எழுத்துலகின் இன்னபிற தளங்களிலும் வெர்சடைலாக ஜொலித்த ஒரே மனிதர் கல்கி மட்டும்தான். கல்கிதான் எழுத்தாளர்களின் பெஞ்ச்மார்க்.

பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், பார்த்திபன் கனவும், ராமாயண, மகாபாரத வரிசையில் தமிழர்களின் இல்லங்களில் இடம்பெற்றுவிட்ட நூல்களாகும். இத்தொடர் வெளியான நாட்களில் கல்கி புத்தகத்தை டோர் டெலிவரி செய்ய வரும் புத்தகக் கடைக்காரரும், அவரின் சைக்கிள் மணி சப்தமும்தான் காலை நேர சங்கீதம்.

கல்கியின் தொடர்களைப் படிப்பதற்கு போட்ட போட்டியை நான் பாடப் புத்தகங்களிடம் போட்டிருந்தால் ஐ.ஏ.எஸ். ஆகியிருப்பேன். அனைவரையும் சோழர் காலத்தில் சஞ்சரிக்க வைத்து ஒரு பிரமிப்பை குறைவின்றி மூட்டிக்கொண்டே இருந்தவர் அமரர் கல்கி. ஒரு வானம், ஒரு நிலவு, ஒரு சூரியன் போல ஒரு கல்கிதான் எக்காலத்திற்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com