0,00 INR

No products in the cart.

பூரண அருளுக்கு பூச வழிபாடு!

மாலதி சந்திரசேகரன்

மிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. தேவாசுரப் போரில் பல இன்னல்களைச் சந்தித்த தேவர்கள், தங்களைக் காக்கும்படி ஈசனிடம் முறையிட்டனர். தேவர்தம் குறை தீர்க்க, சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள், அழகான ஆறு குழந்தைகளாகி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அன்னை பார்வதி அவர்களை அன்போடு சேர்த்தணைக்க, ஓராறு முகமும், ஈறாறு கரமும் கொண்டு அவதரித்தார் ஆறுமுகப் பெருமான்.

முருகப்பெருமானின் அவதார நோக்கத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு, பழனி மலையில் வீற்றிருக்கும் முருகனுக்கு அன்னை சக்தி தேவி, ஞானவேலை வழங்கி ஆசிர்வதித்தார். அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே, அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான் முருகப்பெருமான். அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை முருகப்பெருமான் பெற்று கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.

முருகனுக்கு விசாகம், கிருத்திகை, சஷ்டி ஆகிய நட்சத்திரங்கள் விசேஷமாக இருந்தாலும், தைப்பூசம் அனைத்தையும் விட சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை, கார்த்திகைப் பெண்கள் தாமரை இதழ்களில் தாங்கியதும் ஒரு தைப்பூசத்தன்றுதான் என்று கூறுகிறது கந்த புராணம்.

பழனியாண்டவனுக்கு அன்னை பார்வதி வெற்றிவேலை வழங்கிய தினமாதலால், பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு பக்தர்கள், பால் குடம், காவடி, அலகு குத்துதல், பாத யாத்திரை என்று நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பாத யாத்திரை செய்கின்றவர்கள், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு முருகன் பாடல்களைப் பாடிக் கொண்டும், ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகராஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா’ என்று கோஷங்களை எழுப்பிக்கொண்டும் யாத்திரையைத் தொடருகிறார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

முருகப் பெருமானுக்கு உகந்த மூன்று விரதங்கள் பிரதானமாகக் கூறப்பட்டுள்ளன. அவை : வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் ஆகியவை ஆகும். இந்த மூன்று விரதங்களில் ஏதேனும் ஒன்றை தொடர்ச்சியாகக் கடைபிடிப்பவர்களுக்கு முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நீண்ட கால நம்பிக்கையாகும்.

தைப்பூச விரதத்தை அனுஷ்டிக்கும் முறை :

பொதுவாக, தீவிர முருக பக்தர்கள் மார்கழி மாதத் தொடக்கத்திலேயே கழுத்தில் துளசி மாலை அணிந்து தைப்பூச விரதத்தைத் தொடங்கி விடுவார்கள். விரதம் இருக்கும்பொழுது, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் படத்தை வைத்து வணங்குவது நல்லது. விரதத்தை தொடங்கும்பொழுது, முழுமுதல் கடவுளான விநாயகரை வணங்கி, விரதத்தைத் தொடங்க வேண்டும்.

வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு, செந்நிற காவியை கோலத்தில் வெளிப்புறம் இட்டு, முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. பூஜை அறையில் வேல் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூச்சரம் சாத்த வேண்டும். அதன் இரு புறங்களிலும் இரு விளக்குகளில் ஒவ்வொன்றிலும் மும்மூன்று திரிகள் என ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவதால் வாழ்வில் சீரும் சிறப்பும் வந்து சேரும் என நம்பப்படுகிறது. அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளைப் புரியும் என்பது ஐதீகம்.

தைப்பூச நாள் முழுக்க திருப்புகழோ, கந்தர் சஷ்டி கவசமோ, சரவண சஷ்டியோ பாடிக் கொண்டிருப்பது நல்லது. இன்று விரதம் இருப்பவர்கள் நாள் முழுக்க வெறும் தண்ணீர் தவிர, வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது. சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு,
ஓம் சரவணபவ’ என்கிற மந்திரத்தைச் சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும். சரவணபவ’ என்பதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒன்று,

செல்வம், கல்வி, முக்தி, பகை வெல்லல், கால ஜெயம், ஆரோக்கியம் ஆகும். இவை அனைத்தையும் தரவல்ல ஆறெழுத்து மந்திரமே, ‘சரவணபவ’ என்கிறார்கள் சான்றோர்கள்.

இன்று பூஜையின்பொழுது முருகனின் ஆயிரத்தெட்டு நாமாக்களைக் கூறி, புஷ்பங்களால் அர்ச்சனை செய்வது நல்லது. முருகப்பெருமானுக்கு கடம்ப மலர் மிகவும் விசேஷமாகும். அம்மலர் எளிதாகக் கிடைப்பதில்லை. அதனால் அரளிப்பூவால் அர்ச்சிப்பது நலம் தரும். பூஜையில் வெற்றிலைப் பாக்கு, தேங்காய், வடை, சர்க்கரைப் பொங்கல், தினை மாவு, பழங்கள், வெல்லம் ஆகியவற்றை நிவேதனமாகப் படைக்க வேண்டும். முடிவில் நெய் தீபம், கற்பூர தீபம் காண்பித்து வணங்க வேண்டும்.

எளியோர்க்கு அருளும் இறைவனான முருகப்பெருமானை வணங்குவதன் மூலம், நீண்ட கால நோய்கள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை ஒழிகிறது. பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசுகள் போன்ற துஷ்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

சங்ககாலப் புலவரான நக்கீரர், தனது திருமுருகாற்றுப்படையில் சுப்ரமணியர் தனது பக்தர்களுக்கு அருள்பாலித்ததை காட்டும் வகையில் அறுபடை வீடு என்று ஆறு புனிதத் தலங்களைத் தேர்ந்தெடுத்துக் காண்பித்துள்ளார். இவை, ‘அறுபடை வீடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றிற்கு தனித்தனியாக பல்வேறு தெய்வீக சக்திகள் உள்ளன.
திருப்பரங்குன்றம் குடும்ப ஒற்றுமை, ஆனந்தம் தரும்.
திருச்செந்தூர் நிராகுலம், கவலையின்மை தரும்.
பழனி யோகம், தவநிலை தரும்.
சுவாமிமலை இதம், சுகமளித்தல் நேரும்.
திருத்தணி இல்லற சுகம், இன்பம் உண்டாகும்.
பழமுதிர்ச்சோலை அற்புதம் ஏற்படும்.

நினைத்த காரியங்கள் அனைத்தையும் தடையின்றி நிறைவேற்றி, ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறது முருகனின் அருள். எனவே, தைப்பூச திருநாளில்,
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக : ப்ரசோதயாத்.’

எனும் முருக காயத்ரியை ஆத்ம சுத்தியோடு கூறி வணங்கி, முருகப்பெருமானின் அருளாசிகளைப் பெறுவோம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சொக்கேசன் மண மாட்சி!

0
- பி.என்.பரசுராமன் மதுரை என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது அன்னை மீனாக்ஷிதான். அதிலும் சித்திரை மாதமெனில், மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அனைவர் மனதிலும் நிழலாடும். தெய்வத் திருமணம் நடந்த - நடக்கும் அற்புதத் திருத்தலம். சங்கம் வைத்து...

பெருமைமிகு பங்குனி உத்திரம்!

0
- கவிதா பாலாஜிகணேஷ் தமிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக விழாக்கள் எடுப்பது நமது மரபு. நட்சத்திரங்கள் இருபத்தியேழில் மற்றவைக்கு இல்லாத சிறப்பு பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு உண்டு. இந்த...

பிறவா பேறு தரும் வழிபாடு!

0
- கவிதா பாலாஜிகணேஷ் மாசி மாதப் பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திரத் திருநாள், ‘மாசி மகம்’ எனக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாள் இவ்வருடம் 17.2.2022 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் தீர்த்தமாடுவதை, ‘கடலாடி’ எனக் கூறுவர். மறைந்த...

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...