0,00 INR

No products in the cart.

புண்ணியம்!

சிறுகதை : கீதா சீனிவாசன்
ஓவியம் : சேகர்

காலையிலிருந்தே கலையரசி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். குடும்ப நலனுக்காக அன்று சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தாள். குறிப்பாக, அந்த ஏரியாவில் பிரபலமான ஸ்வாமி ராமன்ஜி அதில் கலந்துகொண்டு ஆசி வழங்கவும் சம்மதித்திருந்தார்.

கணவரையும் மகனையும் கூட சீக்கிரமே எழுப்பி, குளிக்க வைத்து சிறு சிறு வேலைகளை செய்யச் சொல்லியிருந்தாள்.

எட்டு சுமங்கலிகளுக்கான பொருட்களை அழகாக எடுத்து வைத்தாள்.

பூஜை அறை தெய்வீகமாகக் காட்சி அளித்தது. படங்கள் சுத்தமாகத் துடைக்கப்பட்டு, குங்குமம், சந்தனம் வைக்கப்பட்டுஅங்கு இல்லாத தெய்வங்களே இல்லை எனும் அளவிற்குக் காணப்பட்டது. மணம் மிக்க ஊதுபத்தி தனது பணியைச் செய்து கொண்டிருந்தது. அழைக்கப்பட்டவர்கள் வர ஆரம்பித்தனர்.

சரியாகப் பத்து மணிக்கு ராமன்ஜி வந்தார். கலையரசி வரவேற்று பூஜையறைக்கு அழைத்துச் சென்றாள்.

என்னம்மாஎல்லாம் ரெடியா?”

ஆமாம் ஸ்வாமி…”

நல்லதுவீட்ல யாராவது வயசானவங்க இருக்காங்களா?”

என் மாமியார் இருக்காங்க. கொஞ்சம் உடம்பு முடியாதவங்க. மாமனார் இல்லஅதான் அவங்க ரூமிலேயே இருக்காங்க.”

பரவால்லகாலையில சாப்பிட்டாங்களா?” ராமன்ஜி கேட்க, சற்றுத் தயங்கிய கலையரசி “காபி சாப்பிட்டாங்க. பூஜை முடிஞ்சதும் எல்லாரும் சாப்பிடுவோம்!” என்று சொன்னாள்.

ல்லம்மாவயசானவங்களை பட்டினியோட இருக்க வச்சு, நாம செய்யற எந்த வழிபாடும் புண்ணியத்தைக் கொடுக்காதும்மா. மொதல்ல அவங்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்திட்டு வா” கொஞ்சம் கட்டளை தொணியில் ராமன்ஜி சொல்ல, கலையரசி திகைப்பையும் வெறுப்பையும் மறைத்துக்கொண்டு, மாமியாரை கவனிக்க விரைந்தாள்.

2 COMMENTS

  1. என்ன பூஜை பண்ணினாலும் வீட்டிலுள்ள வயது முதிர்ந்தவர்களை நல்லபடியாக
    அன்பு செ லுத்தி அரவணைப்பதுதான்
    புண்ணியம் என்ற படிப்பினையைக் கற்றுக்
    ெ கா டுத்தது கீதா சீனி வாசனி் ன் கதை.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

காலம் கெட்டுப்போச்சு… சிக்கலில் ஷாருக்கான் வாரிசு!

0
- ஜி.எஸ்.எஸ். தன் குழந்தைகளைப் பற்றி ஊடகங்களிடம் பலமுறை ஷாருக்கான் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. ‘என் குழந்தைகள் மிகவும் ஒழுங்கானவர்கள். என்னைவிட கட்டுப்பாடு மிக்கவர்கள். நட்சத்திரங்களின் குழந்தைகள் என்றால் அவர்கள் சீர் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று...

ஷேமிங்! ஷேமிங்!

0
விழிப்புணர்வு விஷயம் - ஆர். மீனலதா, மும்பை ஷேம் ஆன் யு! ஷேம் ஆன் Her! ஷேம் ஆன் Him! ஷேம் ஆன் Them! விஞ்ஞான வளர்ச்சி அதிகமாகி, உலகம் சுருங்கிப் போன போதிலும், மக்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை...

சுண்டி இழுக்கும் சுவையில் காரக் குழம்பு வகைகள்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி கேரட் காரக் குழம்பு தேவையானவை : சற்று நீளமான பெரிய கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல், புளி, மஞ்சள் தூள், உப்பு - தேவைக்ககேற்ப. செய்முறை : வாணலியில் எண்ணெய்...

பொழுதைப் போக்க இந்த செலவு அவசியம்தானா? – மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

0
அன்று 2.15 ரூபாயில் தியேட்டரில் படம் பார்த்த நாம், இன்று 150 ரூபாய் செலவழிக்கிறோம். இக்காலகட்டத்துக்கு இந்த செலவு ஏற்புடையதா? இல்லையா? FB வாசகியர்களின் பதிவுகள்! வறுமையில் உழலும் நடுத்தர வர்க்கத்திற்கு இது சாத்தியம்...

கவிதைத் தூறல்

2
பூமி இடி, மின்னல், மழையுடன் மனிதர்களையும் தாங்குவேன் பொறுமையின் சின்னம் பூமி! ***** சோம்பேறி பொறுப்பை தட்டிக்கழிக்கும் சோம்பேறிக்கு பிடித்த வாசகம், 'மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்!’ ***** தமிழ் உறவு துறவு ஒரு எழுத்து மாறி வாழ்க்கைப் பாடத்தையே புரட்டிப் பார்க்கிறது தமிழ்! - எஸ்.பவானி, திருச்சி -------------------- தனிமை தனிமைப் படுத்தப்பட்டார் கோயிலுக்குள் கடவுள் ஊரடங்கு காலம்! ***** நினைவு மிட்டாய் நினைவில் கைசூப்பும் குழந்தை மாதக் கடைசி! ***** உதவி! தலைமகன் தராததை தபால்காரர் தருகிறார் முதியோர் உதவித் தொகை! - நிலா, திருச்சி