ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு!

ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் வெளியூர் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நவம்பர் 5-ம் தேதி வரை சென்னை புறநகர் மின்சார ரயில்களிலும், விழுப்புரம், அரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரயிலில் செல்லும்போது பட்டாசு கொண்டு செல்ல தடைவிதிக்கப் பட்டுள்ளது. அப்படி பட்டாசு கொண்டு செலவது கண்டறியப் பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்ப்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது..

ரயில் பயணத்தின்போது ஏதாவது பாதுகாப்பு குறைபாடு இருந்தால், ரயில்வே பாதுகாப்பு படை உதவி மையத்துக்கு 139 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அத்துடன், ரயில்வே போலீஸ் உதவி மையத்துக்கு 1512 என்ற எண்ணிலும், 99625 00500 என்ற மொபைல் போன் எண்ணிலும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com