சரஸ்வதியும் (பரா)சக்தியும்!

சரஸ்வதியும் (பரா)சக்தியும்!

– ஆர்.மீனலதா, மும்பை

நவராத்திரி ஒரு தனித்துவமான முழுமையான பண்டிகை.
காரணம்…? தெய்வங்கள், குருக்கள், சுமங்கலிகள், கன்னிப் பெண்கள், குழந்தைகள்,
இசை மற்றும் பிற கருவிகள், கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகியவை இந்த பண்டிகையில்தான் சமமாக பூஜிக்கப்படுகின்றன.

நவமி திதியில் வரும், 'சரஸ்வதி பூஜை', 'ஆயுத பூஜை' என்றும் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், பூஜை அறையில் புத்தகங்கள், எழுதுகோல்கள், பல்வேறு கருவிகள் சரஸ்வதி படத்துக்கு முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. சர்க்கரைப் பொங்கல், தேங்காய், பழம், பூ, சுண்டல், பொரி, கடலை போன்றவை வைக்கப்பட்டு நிவேதனம் செய்வது வழக்கமாக உள்ளது.

பராசக்தி அன்னை பண்டாசுரனுடன் ஒன்பது நாட்களும் போராடியது நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் நாள் சக்தியாக நிற்கும் அம்பாள், பத்தாம் நாள் சிவபெருமானுடன் ஐக்கியமாவதாக ஐதீகம்.

விஜயதசமியென்கிற இந்நன்னாளில் குருவுக்கு வணக்கம் தெரிவித்து, குருதட்சனை அளிப்பது வழக்கம். வருடந்தோறும் வாழ்க்கையில் குருவின் அருள் முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

முதல் நாள், அதாவது நவமியன்று பூஜையறையில் வைத்திருக்கும் புத்தகங்கள், இசைக் கருவிகள் போன்றவைகளை எடுத்து, விஜயதசமி அன்று சிறிது நேரம் படிக்கவும், இசைக்கவும் செய்வது முக்கியம்.

விஜயதசமி சிறப்புகள் :

* ஸ்ரீராமர் ராவணனைக் கொன்று, வெற்றி பெற்று விஜய யாத்திரையை மேற்கொண்ட நாள்.

* வனவாசம், அஞ்ஞாத வாசம் முடிந்து அர்ஜுனன், போர் செய்வதற்காக மரத்திலுள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்த நாள்.

* புதிதாகக் கல்வி, வித்தை, தொழில் என எதைத் தொடங்குவதாக இருந்தாலும், குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் முதன்முதலாக சேர்ப்பதாக இருந்தாலும் விஜயதசமி நாள்தான் விசேஷம்.

நட்பு, நெருக்கம், விருந்தோம்பல், இணக்கம், மகிழ்ச்சி, பக்தி உணர்வு, கலைத்திறமை, கொடைக்குணம், கலாசாரம், பண்பாடு, ஒருமைப்பாடு போன்ற அனைத்தும் நவராத்திரியில்தான் வெளிப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்!

நவராத்திரி ஒரு முழுமையான பண்டிகைதானே!

முப்பெரும் தேவியர் நாமாவளி

ஸ்ரீ துர்கா தேவி ஸ்தோத்திரம்:

ஓம் ஸ்ரீ துர்க்காயை நமஹ:

ஓம் ஸ்ரீ மகாகாள்யை நமஹ:

ஓம் ஸ்ரீ மங்களாயை நமஹ:

ஓம் ஸ்ரீ அம்பிகாயை நமஹ:

ஓம் ஸ்ரீ ஈஸ்வர்யை நமஹ:

ஓம் ஸ்ரீசிவாயை நமஹ:

ஓம் ஸ்ரீ க்ஷமாயை நமஹ:

ஓம் ஸ்ரீ கௌமார்யை நமஹ:

ஓம் ஸ்ரீ உமாயைநமஹ:

ஓம் ஸ்ரீ மகாகௌர்யை நமஹ:

ஓம் ஸ்ரீ வைஷ்ணவ்யை நமஹ:

ஓம் ஸ்ரீ தயாயை நமஹ:

ஓம் ஸ்ரீ ஸ்கந்த மாத்ரே நமஹ:

ஓம் ஸ்ரீ ஜகன் மாத்ரே நமஹ:

ஓம் ஸ்ரீ மகிஷ மர்தின்யை நமஹ:

ஓம் ஸ்ரீ சிம்ஹவாகின்யை நமஹ:

ஓம் ஸ்ரீ மகேஸ்வரியை நமஹ:

ஓம் ஸ்ரீ திரிபுவனேஸ்வர்யை நமஹ:

ஓம் ஸ்ரீ துர்கா தேவி நமஹ:

ஓம்….

ஸ்ரீ லெட்சுமி தேவி ஸ்தோத்திரம்

ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்ம்யை நமஹ:

ஓம் ஸ்ரீ வரலெக்ஷ்ம்யை நமஹ:

ஓம் ஸ்ரீ இந்த்ராயை நமஹ:

ஓம் ஸ்ரீ சந்த்ரவதிநாயை நமஹ:

ஓம் ஸ்ரீ சுந்தர்யை நமஹ:

ஓம் ஸ்ரீ சுபாயை நமஹ:

ஓம் ஸ்ரீ ரமாயை நமஹ:

ஓம் ஸ்ரீ ப்ரபாயை நமஹ:

ஓம் ஸ்ரீ பத்மாயை நமஹ:

ஓம் ஸ்ரீ பத்ம ப்ரியாயை நமஹ:

ஓம் ஸ்ரீ சர்வ மங்களாயை நமஹ:

ஓம் ஸ்ரீ பீதா மப்ரதாரின்யை நமஹ:

ஓம் ஸ்ரீ அம்ரு தாயை நமஹ:

ஓம் ஸ்ரீ ஹரின்யை நமஹ:

ஓம் ஸ்ரீ ஹேமமாலின்யை நமஹ:

ஓம் ஸ்ரீ சுப ப்ரதாயை நமஹ:

ஓம் ஸ்ரீ நாராயணப் பிரியாயை நமஹ:

ஓம் ஸ்ரீ லஷ்மி தேவி நமஹ:

ஓம்….

ஸ்ரீ சரஸ்வதி தேவி ஸ்தோத்திரம்

ஓம் ஸ்ரீ சரஸ்வதியை நமஹ:

ஓம் ஸ்ரீ சாவித்ரியை நமஹ:

ஓம் ஸ்ரீ சாஸ்திர ரூபின்யை நமஹ:

ஓம் ஸ்ரீ ஸ்வேதா நநாயை நமஹ:

ஓம் ஸ்ரீ ஸீரவந்தி தாயை நமஹ:

ஓம் ஸ்ரீ வரப்ரதாயை நமஹ:

ஓம் ஸ்ரீ வாக்தேவ்யை நமஹ:

ஓம் ஸ்ரீ விமலாயை நமஹ:

ஓம் ஸ்ரீ வித்யாயை நமஹ:

ஓம் ஸ்ரீ ஹம்ஸ வாகனாயை நமஹ:

ஓம் ஸ்ரீ மகா பலாயை நமஹ:

ஓம் ஸ்ரீ புஸ்தகப்ருதே நமஹ:

ஓம் ஸ்ரீ பாஷா ரூபின்யை நம:

ஓம் ஸ்ரீ அக்ஷர ரூபின்யை நம:

ஓம் ஸ்ரீ கலாதராயை நம:

ஓம் ஸ்ரீ சித்ர கந்தாயை நம:

ஓம் ஸ்ரீ பாரத்யை நம:

ஓம் ஸ்ரீ ஞானமுத்ராயை நம:

ஓம் ஸ்ரீ சரஸ்வதி தேவி நமஹ:

ஓம்….

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com