விண்வெளியில் விவசாயம் செய்து சீனா அசத்தல்!

China space farming
China space farming

விண்வெளியில் கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை விளைவித்து சீனா அசத்தல்.

விண்வெளி ஆராய்ச்சியில் வல்லரசு நாடுகள் தொடங்கி வளர்ந்து வரும் நாடுகள் வரை தற்போது அனைத்து நாடுகளுமே ஆர்வம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. இதற்காக பூமியிலிருந்து 400 ஒரு கிலோ மீட்டர் தொலைவில் லோவர் சுற்றுவட்ட பாதையில் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து இருக்கின்றன. இந்தப் பட்டியலில் இணைய இந்தியாவும் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்தியா 2025 இல் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு இருக்கிறது.

இந்த நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் தலைசிறந்த விளங்கும் நாடுகளில் ஒன்றான சீனா தற்போது விண்வெளியில் விவசாயம் செய்து சாதனை படைத்திருக்கிறது. சீனா விண்வெளியில் தனக்கென்று தனியாக விண்வெளி ஆய்வு மையத்தை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதில் இருந்து விண்வெளி ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக இரண்டு விஞ்ஞானிகள், ஒரு பேராசிரியர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி விண்ணுக்கு சென்றார்கள். இவர்கள் சீனாவின் டியாங்காங் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சீனா விண்வெளியில் விவசாயம் செய்வதற்காக உருவாக்கிய பிரத்தியேக இயந்திரத்தைக் கொண்டு பூமியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண்ணில் இருந்து கீரை, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பயிரிட்டனர். தற்போது அவைகள் அறுவடை செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேற்றமாக கருதப்படுகிறது.

அதே சமயம் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் தனியாக இயக்கி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலும் விவசாயத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com