மெட்டாவின் புதிய வாய்ஸ் நோட் அப்டேட்!
மெட்டா நிறுவனத்தின் whatsapp செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது வாய்ஸ் நோட் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளது.
whatsapp கொண்டு வரப்போகும் இந்த புதிய அப்டேட்டால் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. இந்த புதிய அப்டேட்டை whatsapp யூசர்கள் பெற்ற பிறகு, ஒருவருக்கு வாய்ஸ் நோட் ரெக்கார்ட் செய்யும்போது அதன் அருகே லாக் சிம்பல் தென்படும். வாய்ஸ் நோட் அனுப்புவதற்கு முன்பு அதை கிளிக் செய்துவிட்டால் மறுமுனையில் இருப்பவர்கள் ஒருமுறை அந்த வாய்ஸ் நோட்டை கேட்டதும் தானாகவே அழிந்துவிடும். இதனால் மறுமுனையில் உள்ளவர் உங்களுடைய வாய்ஸ் நோட்டை மற்றவர் யாருக்கும் ஃபார்வேர்ட் செய்யவோ அல்லது சேவ் செய்யவோ முடியாது.
அதேபோல வாய்ஸ் நோட் அனுப்பும்போது View Once என்பதை ஒரு முறை ஆன் செய்துவிட்டால் அதை மறுபடியும் மாற்ற முடியாது. நீங்கள் அனுப்பிய வாய்ஸ் நோட் மறுமுனையில் இருப்பவர் கேட்டவுடனேயே தானாக அழிந்துவிடும். இதை நீங்களே நினைத்தாலும் மீண்டும் மீட்டெடுக்க முடியாது. whatsappபில் இந்த புதிய அம்சத்தால் அதன் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்தும், அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்காத வகையிலும் இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் இன்றுமுதல் whatsapp குறிப்பிட்ட பழைய மாடல் ஸ்மார்ட்போன்களில் தங்களுடைய சப்போட்டை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தின் அதிக கவனம் செலுத்துவது காரணமாக, பழைய ஸ்மார்ட் ஃபோன்களில் இதற்கான சேவை நிறுத்தப்படுவதாக whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே அப்டேட் செய்யப்படாத whatsapp அப் செயலியை பயன்படுத்துவோர் உடனடியாக அதை அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது எந்தெந்த சாதனங்களில் நிறுத்தப்படும் என்கிற விவரங்கள் whatsapp வலைப்பக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.