spot_img
0,00 INR

No products in the cart.

சிங்காரச் சென்னையின் மைல்கல் நகர்ப்புற சதுக்கப் பூங்கா!

சியாவிலேயே மிகப்பெரியது’ என்ற சிறப்பைப் பெற்றது சென்னை, கிண்டி கத்திபாரா சந்திப்பில் அமைந்த மேம்பாலம். குளோவர் இலை வடிவமைப்புடன் கூடிய இந்த மேம்பாலம், தலைநகர் சென்னையின் நுழைவாயிலாகவும், சென்னையின் சொல்லும்படியான அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. சென்னையின் அனைத்துப் பகுதி பெரிய சாலைகளையும் இணைக்கும் ஒரு மேம்பாலமாகவும் இது விளங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

மிகப்பெரிய மேம்பாலமாக இது விளங்குவதால், அதன் கீழே 5.38 லட்சம் சதுர அடி பரப்பளவு காலியிடம் இருந்தது. இந்த இடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் 14 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாடுமிடமாக நவீன வசதிகளுடன் கூடிய, ‘நகர்ப்புற சதுக்கமாக’ மேம்படுத்தியுள்ளது. பணிகள் நிறைவடைந்த இந்தப் பூங்காவை 16.12.2021 அன்று தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் பொது மக்கள் பயன்பாட்டுக்காக நேரில் வந்து திறந்து வைத்து பார்வையிட்டார். ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தினை நிறைவேற்றுவதில் ஒரு மைல் கல்லாக, ‘கத்திபாரா நகர்ப்புறச் சதுக்கம்’ விளங்குகிறது.

சென்னையின் முக்கிய இடங்களான சென்ட்ரல் ரயில் நிலையம், வள்ளுவர் கோட்டம், கடற்கரை லைட் ஹவுஸ், புனித ஜார்ஜ் கோட்டை போன்ற இன்னபிற இடங்களையும் அழகிய ஓவியங்களாக சுற்றிலும் வரைந்துள்ள இந்தச் சதுக்கத்தின் வடிவமைப்பு, சிங்காரச் சென்னையின் அடையாளத்தையும், தமிழக மக்களின் கலாசாரப் பெருமையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும், கைவினைப்பொருட்கள் அங்காடி, உணவுக்கூடம், சிறார் விளையாடுமிடம், கழிப்பறை வசதிகளோடு, கார்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம் மற்றும் பேருந்து நிறுத்தம் என அமைந்துள்ளது. இந்த சதுக்கத்தில் கிண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் வழிப்பாதையில், ‘அ’விலிருந்து, ‘ஃ’ வரை தமிழ் உயிர் எழுத்துக்கள் எழிலாக நிறுவப்பட்டுள்ளன. கடந்த தி.மு.. ஆட்சியில், மறைந்த கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் செம்மொழி பூங்காவை நிறுவினார். தற்போது இந்நாளைய தி.மு.. ஆட்சியில், இந்தப் பூங்காவில் தமிழ் உயிர் எழுத்துக்களை நிறுவி, ‘தமிழ் எழுத்துப் பூங்கா’வாக இதை மக்கள் பயன்பாட்டுக்குத் தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தச் சதுக்கம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சதுக்கப் பூங்காவின் மைய பகுதியில் 3000 அடி நீளத்தில் மருதாணி செடிகளும் 27 வகையான 7,069 செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவின் அனைத்துப் பகுதிகளும் இரவில் அழகிய சோலார் விளக்கொளியில் விளங்கும்படி அமைந்துள்ளது ரசிக்கத்தக்கதாகும்.

நமது, ‘கல்கி இணையதளம்’ சார்பாக இந்தப் பூங்காவின் பயன்பாடு குறித்து அப்பகுதி மக்கள் சிலரை சந்தித்துப் பேசியபோது

பாஷ்யம் ரெட்டி :
இது ரொம்பவே பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனாலும், இந்தப் பூங்காவை சுற்றிலும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. போக்குவரத்து நெரிசலைக் கடந்து வந்து மக்கள் இந்தப் பூங்காவை பயன்படுத்த உண்டான வசதிகளையும் அரசு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதேபோல், தற்போது நிறைய கடைகள் இந்தப் பூங்காவில் உள்ளன. இதற்கு மேலும் கடைகளை அரசு ஏற்படுத்தாமல் இருந்தால்தான் இது பொழுதுபோக்கு பூங்காவாக இருக்கும். இல்லையென்றால் இது வெறும் வணிக வளாகமாகத்தான் இருக்கும்.

ராணி :
இந்தப் பூங்கா எங்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு. தேசிய நெடுஞ்சாலை என்பதால் கொஞ்சம் தூசி, புகை இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் எங்களைப் போன்ற இல்லத்தரசிகளுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய ரிலாக்சேஷன் இடமாக இது இருக்கும். அதோடு, இங்கிருந்து நாங்கள் பீச்சுக்குப் போய் பொழுது போக்குவதெல்லாம் ரொம்ப சிரமமான விஷயம். எங்களைப் போன்றோர் நடை பயிற்சி செய்ய ரொம்ப வசதியாக இருக்கும். இந்தப் பூங்கா ஆலந்தூர் பகுதியில் அமைந்திருப்பது இப்பகுதி மக்களாகிய எங்களுக்கு வரப்பிரசாதம்தான். தமிழக முதல்வருக்கு நன்றி.

தகவல் : ஜி.செல்வகுமார், எம்.கோதண்டபாணி

Other Articles

Stay Connected

263,924FansLike
1,884FollowersFollow
3,230SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

நாட்டிலேயே முதன்முறை…ஹாரிபாட்டர் மாளிகையில் திருமண வரவேற்பு!

1
 பேட்டி: ஜிக்கன்னு. வருகிற பிப்ரவரி 4-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிவலிங்கபுரம் என்ற மலை கிராமத்தில் இளம் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் தினேஷூக்கும் ஜெனகநந்தினிக்கும் நடக்கவுள்ள திருமண  வரவேற்பு நாடு முழுவதும் பெரும்...

அஞ்சலி:இந்திய தொல்லியல் துறையின் பிதாமகர் இரா. நாகசாமி!

0
மஞ்சுளா சுவாமிநாதன். தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல்துறை அறிஞரும் சரித்திர ஜாம்பவானுமான பத்ம பூஷன், டாக்டர் இரா. நாகசாமி தனது 91 ஆம் அகவையில், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில், அமைதியான முறையில்...

காற்றில் பறந்த வாக்குறுதிகள்!

0
-மூத்த பத்திரிகையாளர் ஜாசன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரிசி குடும்ப கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொதுவான நிவாரணத்தொகை 4000 , ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு...

வந்தியதேவனாக ‘வாத்தியார்’ எம்.ஜி.ஆர்!

0
ராகவ் குமார்  அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழக மக்களிடையே நீங்கா இடம் பிடித்த அமரத்துவம் வாய்ந்த நாவல். இன்றுவரை தமிழின் முன்னணி புத்தகங்கள் வரிசையில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு தனியிடம்...

கொங்கு மண்டலத்தில் நிலாபிள்ளை வழிபாடு!

0
- காயத்ரி தமிழர் பாரம்பரியத்தில் இறை வழிபாடுகளுடனும் இயற்கையுடனும் தொடர்புடையதாக தைப்பூசத்தை முன்னிட்டு, நிலாபிள்ளைக்கு சோறு மாற்றுதல் என்னும் கும்மி அடித்தல் நிகழ்ச்சி கொங்கு மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருவிழாவிள்கு முன்னதாக தொடங்கும் இந்த...