0,00 INR

No products in the cart.

சொல்ல விரும்புகிறோம்!

‘மனம் மட்டுமே மருந்து. மனதை தயார்படுத்துவதன் மூலமே எந்த நோயையும் குணப்படுத்த முடியும்’என்று சொன்ன கும்பேவின் வழியைப் பின்பற்றி பயனடையலாம். ஜி.எஸ்.எஸ். பல வித்தியாசமான செய்திகளைச் சொல்வதில் ஜித்தன். – ஆர்.ஜானகி, சென்னை

‘கண்ணாடி… முன்னாடி… பின்னாடி… மெர்சல் மிரர் மீட்’ரியலி சூப்பர்! தனக்குத்தானே பேட்டி எடுப்பது புதுமையான ஒன்று. ரோஷிணி தனது ரியல் லைஃப் பற்றியும், கண்ணம்மா பாத்திரத்தில் தனது நாடகத்தொடர் பற்றியும் கூறியது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! – எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

‘அரிசியை சாதமாக்குவதில் மேற்கொள்ளும் பொறுமையும் ப்ரொஸீஜரும், இல்வாழ்க்கையிலும் தேவை’ என, ‘நச்’சென தெளியவைத்த ‘ஒரு வார்த்தை’,குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கோர்க்கப்பட்ட கலவையாகி சிறப்பித்தது. – எஸ்.ஸ்ரீநிவாசன், மேற்கு மாம்பலம்

தோழி சுபாஷினியின் மன உறுதியும் திறமையும் அசர வைக்கின்றன. கவிதை வரிகளில் தன்னம்பிக்கை மிளிர்கிறது! – லக்ஷ்மிவாசன், சென்னை

கண்ணம்மா – ரோஷிணி பேட்டியளித்து சுவாரஸ்யப் படுத்தியிருந்த விதம், ‘தெறி’க்க வைத்திருந்தது! – சாந்தி சுந்தர், அயஞ்சேரி

அனுவின் தலைப்புதான், ‘ஒரு வார்த்தை.’ஆனால், உள்ளே அவர் தருவதோ, அளவற்ற அதே நேரத்தில் மறுக்க முடியாத; மறக்க முடியாத விஷயங்கள். – க.மோகனசுந்தரம், திருநெல்வேலி

‘மனம் மட்டுமே மருந்து’ என்ற மேரி பேக்கர் பற்றிப் படித்ததும், ‘உண்மைதான்’ என்று மனம் ஒப்புக்கொண்டது. எங்களை, நாங்களே மன ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவிய ‘மங்கையர் மலருக்கு’பாராட்டுகள். – ஹேமமாலினி, சென்னை

பேராசிரியர் மீனாட்சி வெங்கடேஷ் அவர்களின் பேட்டியை படித்து, ஒரு நல்ல ஆசிரியரிடம் பாடம் கற்ற திருப்தி ஏற்பட்டது.- வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

தனுஜா ஜெயராமன் எழுதிய, ‘பாரம்’ சிறுகதை மனதை நெகிழ வைத்தது. எந்த ஒரு பிரச்னைக்கும் அங்காளம்மனுக்கு ஒத்த ரூபா முடித்து வைத்து, நம்பிக்கையுடன் காத்திருக்கும் அவரின் செயல், மனம் மகிழ வைத்தது. லக்ஷ்மி அம்மாள் போன்றோரிடம் இருக்கும் உறுதியும் வைராக்கியமும்தான் பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதைப் புரியவைத்த அழகான சிறுகதை. – நந்தினி கிருஷ்ணன், மதுரை

எங்கள் வீட்டில் தென்னை மரங்கள் இருந்தபோதிலும், ‘ஸ்ரீஃபல்’ தேங்காயை எப்போதும் பார்த்ததில்லை. ஏன், கேள்விப்பட்டதே இல்லை. இதைப்பற்றி தெரிவித்த பார்கவி மேடத்திற்கும், ‘மங்கையர் மலரு’க்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். – கிரிஜா ராகவன், கோவை

அனுஷாவின், ‘ஒரு வார்த்தை’ உண்மையிலேயே, ‘திரு வார்த்தைதான்.’- ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்

‘தானம் எனப்படுவது யாதெனில்’ கட்டுரையைப் படித்து, மனம் நெகிழ்ந்து போனது. இந்த சின்ன வயதில் ஆதிரைக்கு இருக்கும் இரக்க குணம், அன்பு என அனைத்தையும் படித்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. – பானு பெரியதம்பி, சேலம்

ரத்த தானம். சிறுநீரக தானம் போன்றவற்றை விட, சிறந்ததாக அமைந்துவிட்டது அதிரையின் முடி தானம்.- அ.சம்பத், சின்னசேலம்

‘அன்புச்சுமை’படக்கதை, அன்பின் பெருமையை அருமையாகக் கூறியது. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வர வேண்டும். – எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

விநாயகச்சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க கோன் கொழுக்கட்டை தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் - 1, தேங்காய் துருவல் - 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப. செய்முறை : முதலில்...

உதடுகள் பராமரிப்பு

0
வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் பூசிவந்தால், உதடுகள்...

கார்ட்டூன்களுக்கும் உண்டு தடை

0
-ஜி.எஸ்.எஸ். கார்ட்டூன் திரைப்படங்களும் கார்ட்டூன் தொடர்களும் யாருக்கானவை? ‘இதில் என்ன சந்தேகம்? குழந்தைகளுக்கானவை’என்று பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள். இளைஞர்களும் வயதானவர்களும்கூட ஒருசேர கார்ட்டூன்களை/காமிக்ஸ்களை ரசிப்பதுதான் உண்மை. நோயாளிகளின் மன இறுக்கத்தைப் போக்க...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி

0
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், ‘கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட...

பெண்களைப் புரிந்துகொள்வோம்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க ஆர்.கெஜலட்சுமி, லால்குடி பெண் - ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப்போல வேகமாக ஓடவோ, தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை...