0,00 INR

No products in the cart.

சொல்ல விரும்புகிறோம்!

டியுடன் உறவாடும் மடிப்பிள்ளையும்
கையுடன் குலாவும் கைப்பிள்ளையும் அவசியமெனினும்
தங்களது ரத்தமான உயிர்ப்பிள்ளைகளையும்
தங்களுக்கு உயிர் கொடுத்த பெரிய பிள்ளைகளையும் (பெற்றோர்களையும்)
தவிக்க விடாமல் பாதுகாக்க வேண்டியது
இடையில் செயல்படும் பிள்ளைகளின் கடமை. (ஆனால், இது மிஸ்ஸிங்) என்பதைப் படிக்கையில் கண்கள் கலங்கியது. அருமை! அருமை! ஒரு வார்த்தை தலையங்கம்.
ஆர்.மீனலதா, மும்பை

பெற்ற குழந்தைகளின் மீது பாசத்தை, உறவை பலப்படுத்த தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள் என்று, ‘ஒரு வார்த்தை தலையங்கத்தில் சுட்டிக்காட்டியதுஅருமை.
து.சேரன், ஆலங்குளம்

ங்கையர் மலரில், ‘எங்கிருந்தோ வந்த யானைகள்நிஜ சம்பவத்தைப் படித்து, மனம் நெகிழ்ந்துபோனேன். நிலவரசன் செய்யாத தவறுக்காக அவரது பணிக்கு ஆபத்து வரும் வேளையில் திடீரென்று யானைகள் கூட்டம் வந்து காப்பாற்றியதை நினைத்தால் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. நல்லவர்களுக்கு என்றும் ஆண்டவன் துணை நிற்பான் என்பதற்கு இதனைவிட நல்ல உதாரணம் கூற முடியாது.
ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை

வ்வார மங்கையர் மலரில் கும்பாபிஷேக மருந்து குறித்து படித்தேன். இதுநாள் வரை நான் கேள்விப்படாத புதிய, அரிய மருந்தாக இருந்தது. மூர்த்திகளின் பிரதிஷ்டை நடக்க இம்மருந்து பயன்படுகிறது என்கிற மகத்துவத்தைக் கண்டு வியந்து போனேன். சுவாரசியங்களும், பாரம்பரியமும் கலந்த நமது ஹிந்து தர்மத்தை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.
எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

புண்ணியம்என்ற சிறுகதை மனதை நெகிழ வைத்தது. உண்மைதான். வீட்டில் வயதானவர்கள் இருக்கும்போது, அவர்களைப் பட்டினி போட்டுவிட்டு நாம் செய்யும் பூஜையும் எந்த ஒரு நல்ல செயலும் நமக்கு எந்தவித புண்ணியத்தையும் கொடுக்காது. முதலில் அவர்களுக்குத் தேவையானதை கவனித்துவிட்டு, பிறகுதான் கடவுளை கவனிக்க வேண்டும் என்ற ஒரு மிகப்பெரிய கருத்தை, சின்ன கதையில் சொன்னதற்குப் பாராட்டுக்கள்.
உஷா முத்துராமன், திருநகர்

னுஷாவின், ‘ஒரு வார்த்தைபலே பேஷ்! உயிரில்லாத கணினிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட, உயிருள்ள நம் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை என்பதைப் புரியவைத்த அருமையான ஒரு வார்த்தை. அம்மா, பிள்ளை பாசம், உறவு வலுப்படும் என்று உறுதியாகச் சொன்ன அனுஷாவிற்குப் பாராட்டுக்கள்.
நந்தினி கிருஷ்ணன், மதுரை

விதைத் தூறலில் இடம்பெற்ற ஒவ்வொரு கவிதையும் ரசித்துப் படிக்க வைத்தது. இந்த தூறலில் நனைந்ததால் எனக்கு சந்தோஷத் தும்மல் வந்துவிட்டது. மிகவும் அருமையான கவிதைகளைப் பிரசுரித்த. ‘மங்கையர் மலருக்குபாராட்டுக்கள்.
பிரகதா நவநீதன். மதுரை

ல்சுவை பட்சண சிறப்பிதழ்என்ற அறிவிப்புப் பக்கத்தில் வந்த போட்டிகளைப் பார்த்ததும், மனம் கற்பனையில் பறக்கத் தொடங்கிவிட்டது. மற்றும் பட்சண அனுபவங்கள், பட்சண சிரி வெடி, டுமீல் ஜோக்ஸ், டமால் மீம்ஸ் என்று பல தலைப்புகளைக் கொடுத்தது, எங்களை எழுதியே ஆக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

ன்பு வட்டம் பகுதியில், ‘தீபாவளி எப்படி இருக்கும்?’ என்று வாசகர் கேட்ட கேள்விக்கு பதிலாக, ‘ஜம்முன்னு இருக்கும் என்று கேள்வி கேட்டவர் பெயரின் கடைசி இரண்டு எழுத்தையே பதிலாகக் கூறிய அனுஷாவுக்கு கோடி தீபாவளி வாழ்த்துக்கள்.
து.சேரன், ஆலங்குளம்

த்தனை முயற்சிகள் எடுத்தாலும் 30 நிமிடத்தில் 134 வகை உணவுகள் தயாரிப்பது என்பது என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒரு சாதம், ஒரு குழம்பு, ஒரு பொரியல் வைத்து சமையலை முடிப்பதற்குள் போதும் போதும் என்று இருக்கிறது. அப்பப்பாஇந்த இல்லத்தரசியின் சாதனை மிகவும் போற்றத்தக்கது
வி.கலைமதி சிவகுரு, புன்னைநகர்

வைரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் வைர வரிகள். சிந்திக்கத் தந்த தத்துவங்களும்,
சர் சி.வி.ராமனின் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் பாராட்டத்தக்கவை. தொட்டில் கவிதை தூங்க வைக்கும் இனிமை.
– ஜெயகாந்தி

புண்ணியம்முதியோரை அரவணைத்துச் செல்லும் படிப்பினையைத் தந்த நல்லதொரு சிறுகதை.
– லக்ஷ்மி நாராயணன்

ன்ன பூஜை பண்ணினாலும், வீட்டிலுள்ள வயது முதிர்ந்தவர்களை நல்லபடியாக அன்பு செலுத்தி அரவணைப்பதுதான், ‘புண்ணியம்’ என்ற படிப்பினையைக் கற்றுக் கொடுத்தது கீதா சீனிவாசனி்ன் கதை.
– சேரன்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

சொல்ல விரும்புகிறோம்!

5
Excellent work. Appreciate your simple and clear language and presentation which a commoner can relate to and enjoy. Thanks for the wonderful work. - Bhuvaneshwari...

சொல்ல விரும்புகிறோம்!

0
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்? அற்புதமான கட்டுரை. நமக்குத் தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. பாராட்டுக்கள் பல. - கே.எஸ்.கிருஷ்ணவேணி பாரதியாரை பற்றி எவ்வளவோ படித்திருக்கிறோம். பாரதியின் எள்ளுப்பெயரர் நிரஞ்சன் பாரதி எழுதும் இத்தொடரில், பாரதி காங்கிரஸ்...

சொல்ல விரும்புகிறோம்!

0
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்? Amazing information... every story of HIS is like a blessing. - ஆதித்யா மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளை மட்டுமே படித்த பலரும், மஹாகவி பாரதியாரின் எள்ளுப் பேரனுடைய இந்தக்...

சொல்ல விரும்புகிறோம்!

1
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்? ஆரம்பமே அமர்க்களம்! - சுஜாதா வேங்கடகிருஷ்ணன் நிரஞ்சன் பாரதிக்கு வாழ்த்துக்கள். மகாகவி பாரதி பிறந்த நாளில், அவரது வழித்தோன்றல் நிரஞ்சன் பாரதியின், ‘எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்’ தொடரை மிகுந்த எதிர்பார்ப்போடு படிக்கக்...

சொல்ல விரும்புகிறோம்!

0
நம் குடும்பத்தில் உள்ளவர் இப்புவியை விட்டு மறைந்து விட்டால், அவரின் மீதுள்ள பாசம் தொடர்ந்து நீடித்து நிலையாக எப்போதும் மனதில் கட்டுண்டு இருக்க, அனுஷா மேடத்தின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளலாம். - து.சேரன், ஆலங்குளம் ‘ஒரு வார்த்தை’...