0,00 INR

No products in the cart.

வ்யாஸம் வந்தே ஜகத்குரும்!

குரு பௌர்ணமி (13.7.2022)

– ராஜி ரகுநாதன்

முனை நதி தீரத்தில் செம்படவர்கள் வசித்து வந்தனர். அவர்களின் தலைவன் தாசராஜன். அவனது மகள் கைவர்த்தி. இவர்கள் படகு கட்டுவது, படகு ஒட்டுவது, வலை பின்னுவது, பறவைகளை, மீன்களை வேட்டையாடுவது முதலான தொழில்களைச் செய்து வந்தனர். கைவர்த்தி இந்த கலைகளை நன்கு அறிந்தவள். கைவர்த்திக்கு சத்தியவதி என்ற பெயரும் உண்டு. இவள் ஒரு நாள் பராசர மகரிஷியை படகில் ஏற்றி நதியைக் கடக்கவேண்டி வந்தது. அவள் அழகும் இளமையும் மிகுந்த கன்னிப் பெண். அவள் பேச்சில் தொனித்த இனிமை பராசரரைக் கவர்ந்தது. மத்ஸ்ய கந்தியை யோஜன கந்தியாக மாற்றினார். மீன் நாற்றம் எடுத்த அவள் உடலை சுகந்த மணம் மிக்கதாக்கினார். அவளுடைய கன்னிமைக்கு பங்கம் ஏற்படாதபடி அவளுக்கு ஒரு குழந்தையை அருளினார் பராசரர்.

அந்த சிசுவே முக்காலமும் உணர்ந்தவரான வேதவியாசர். வியாசரின் பெயர் ‘அபாந்தரதமர்’ என்பது. இதன் பொருள் அறியாமையை விரட்டுபவர், ஆத்ம ஞானம் கொண்டவர் என்பது. வேதங்களைப் பிரித்து அளித்ததால் வியாசர் என்று அழைக்கப்பட்டார். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோமதி நதிகளின் தீரங்களில் வசித்த முனிவர்களுக்கு சேவை செய்தார். நிகமம், ஆகமம் அனைத்தும் கற்றறிந்தார். பல புனிதத் தலங்களை தரிசித்து அபாரமான தெய்வீக ஞானத்தை அடைந்தார். நிலைத்த மனதுடையவராக, முழுமையான தத்துவ போதனைகளைக் கொண்ட மகாபாரதத்தைப் படைத்தார்.

குருவிடம் கற்றவுடனே எந்த மாணவனும் அறிஞனாக முடியாது. கற்ற கலை வளர வேண்டும் என்றால் வாழ்நாள் முழுவதும் சோம்பலின்றி கற்கும் குணம் இருக்க வேண்டும். நியம நிஷ்டையோடு கூடிய நற்பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டவற்றில் திருப்தி அடையாமல் கல்லாதது உலகளவு என்று நம்பி உழைத்து முன்னேற வேண்டும். வியாசர் அவ்வாறு முன்னேறினார். அவர் பிரம்மஞானி. ஞானச் செல்வர். வேத சாகித்தியத்தை கரைத்துக் குடித்த மேதை. கூர்ந்த அறிவு கொண்ட படைப்பாளி பிரம்ம சூத்திரமும் பகவத் கீதையும் எழுத்தில் வடித்த மாமேதை. பாரத கலாசாரத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்பிய மாபெரும் சிற்பி. இவரால்தான் வேதங்கள் ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்கு வடிவங்களாக வெளிப்பட்டது.

வியாசர் வேதங்களை தன் சீடர்கள் மூலம் உலகெங்கும் பிரசாரம் செய்வித்தார். அத்தகைய மாபெரும் செயல், ‘ஆஷாட பௌர்ணமி’ அன்றுதான் தொடங்கியது. அதனையே குரு பூர்ணிமாவாகக் கொண்டாடுகிறோம். வியாச முனிவர் வாழ்நாள் முழுவதும் ஆன்மிகமும் வேத கலாச்சாரமும் நிலை பெறுவதற்கும் காப்பாற்றப்படுவதற்கும் கடுமையாக உழைத்தார்.

வியாச மகரிஷி பிரம்ம ஞானத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்… பிரம்மம் இருப்பதை ஏற்று மனிதன் தன் வாழ்வில் தனக்கு வாய்த்த சாமானிய பிரமைகளை விட்டுவிட்டு தன் உண்மை இயல்பான பிரம்மத்தை உணர வேண்டும். அதற்கு ஏதுவாக அனுபவப்பூர்வமான உயர்ந்த கருத்துக்களோடு கூடிய ஞானமே பிரம்மஞானம். இதனையே தற்போது The true knowledge of Supreme Self என்று விவரிக்கிறோம்.

வியாசர் தன் நூல்கள் மூலம் உண்மையான நிஷ்டையோடு கூடிய உலக வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். தர்மத்தோடு கூடிய மானுட வாழ்க்கையின் அமைப்பை வடிவமைக்கிறார்.

பிரம்ம சூத்திரம் என்ற நூலைப் படைத்தார். அதில் மனிதனுக்கும்  மனிதனின் நிழலுக்கும் உள்ள உறவு, தீபத்திற்கும் அதன் ஒளிக்கும் உள்ள உறவு, பொருளுக்கும் பொருளின் இயல்புக்கும் உள்ள உறவு – இதுவே பிரம்மனுக்கும் ஜீவனுக்கும் இடையே உள்ள உறவு என்று ‘பிரம்மவாதம்’ போதிக்கிறது. வியாச முனிவர் மகாபாரதம் பாகவதம் நூல்களின் மூலம் ப்ரவ்ருத்தி- நிவ்ருத்தி, செயல்களை முக்கியமாகக் கொண்ட ஞானம், தியாகத்தை நியமமாகக் கொண்ட போகம், உடலை விடாத ஆத்மா ஆகியவற்றைப் பற்றி போதிப்பதற்காக கிருஷ்ணர் கதையைப் படைத்தார்.

கிருத யுகத்தில் சமுதாய அமைப்பு மனிதனின் உள்ளத் தூய்மையின் மேல் ஆதாரப்பட்டு இருந்தது. திரேதா யுகத்தில் அன்றைய மனிதன் தன் கண்ணோட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தான். அந்த கண்ணோட்டம் அவனுக்கு கவுரவம் அளித்தது. துவாபர யுகத்தில் விவகார ஞானத்தைப் பொறுத்து மனித வாழ்க்கை போற்றப்பட்டது. அதாவது அமைச்சரவையை நடத்தக்கூடிய மனிதனின் சாமர்த்தியமும் பிறருக்கு அறிவுரை வழங்கக்கூடிய மனிதனின் ஆளுமையும் சமுதாய அமைப்பின் நன்மை தீமைகளோடு தொடர்பின்றி ஏற்கப்பட்டது.

கலியுகத்தில் நீதி நேர்மையோடு தொடர்பின்றி செயல்களை நடத்தக்கூடிய தந்திரசாலிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இன்றைய மனிதன் தான் நினைத்ததை சாதிப்பதற்கு தர்மம் அதர்மம் என்று யோசிக்காமல் பாவம் செய்யும் பயத்தை கூட விட்டொழித்து கீழான முறைகளை கடைப்பிடிப்பதற்கு தன் அறிவை பயன்படுத்துகிறான்.

பகவத்கீதை ராமாயணம் மனுதர்ம சாஸ்திரம் ருக் வேதம் போன்றவற்றை ஜெர்மனியர் தம் மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டார்கள். மார்க்ஸ் முல்லர் வியாச முனிவரை Enormous, Extraordinary, Explorer and Sacred poet என்று வர்ணிகிறார். அறிவாற்றலில் வியாசரைப் போல இன்னொருவர் பிறக்கவில்லை.

பகவத்கீதையில் இருந்து சேகரித்த தியான யோகமே இன்று ஜப்பான், சைனா நாடுகளில் ஜென் சம்பிரதாயம் என்ற பெயரோடு விளங்குகிறது. ஷாஜஹானின் புதல்வன் தாரா நான்கு வேதங்களையும் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தான். அக்பரின் அவையில் இருந்த அபுல்பசல் மகாபாரதத்தை சமஸ்கிருதத்திலிருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தான்.

‘அசதோமா சத்கமயா!
தமசோமா ஜ்யோதிர்கமயா!
ம்ருத்யோர்மா அம்ருதம் கமயா!’

அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும் இருளில் இருந்து ஒளிக்கும் மரணத்திலிருந்து மரணமில்லா நிலைக்கும் பயணம் செய்! அதாவது, தீய சிந்தனைகளையும் தீய ஆசைகளையும் விட்டுவிட்டு நல்வழக்கங்களை பழக்கப்படுத்திக் கொண்டு மனமும் சொல்லும் செயலும் புத்தியை சரணடைந்து உய்வடைய வேண்டும்.

குரு என்றால் யார்?

‘குகாரோ குணாதீத: ருகாரோ ரூபவர்ஜித:’

குணங்களற்றவர், வடிவமற்றவர்- இறைவன் ஒருவனே!

‘கு’ என்றால் அஞ்ஞானம், ‘ரு’ என்றால் நிர்மூலனம். எனவே, அஞ்ஞானத்தை அழிப்பவரே குரு!

குருமார்களின் பாதங்களைப் பணிவோம்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன் தமிழ் தெலுங்கு இரு மொழி இலக்கிய உலகிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருதும் தினசரி டாட்காம் வழங்கிய தெய்வத் தமிழர் விருதும் பெற்றுள்ளார். இது நம் சனாதனதர்மம் என்ற நூலும் மேடம் கதைகள், பால்டம்ளர் என்ற சிறுகதைத் தொகுப்புகளும் இவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. தெலுங்கில் இவருடைய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை நூலை ருஷிபீடம் பதிப்பகம் சிறப்பாக வெளியீட்டது. தாய்மண்ணே வணக்கம் என்ற சிறுகதை மங்கையர்மலர் போட்டியில் பரிசு பெற்றதை பெருமையாக நினைக்கிறார்.

Stay Connected

261,078FansLike
1,920FollowersFollow
11,300SubscribersSubscribe

Other Articles

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

0
டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி...

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

0
-லதானந்த்   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

0
-பிரமோதா, சக்தி.சாமிநாதன். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது ‘’தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க...

சிவரஞ்சனியும் லஷ்மி பிரியாவும்!

0
-தனுஜா ஜெயராமன். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளில்  தமிழ்படங்கள் மட்டுமே ஒன்பது விருதுகளை வென்றுள்ளது மகிழ்ச்சியான சேதி! கொரானாவால் சற்று தொய்வடைந்திருக்கும் தமிழ்த் திரையுலகுக்கு இந்த விருதுகள் நம்பிக்கையும் உற்சாகமும் தருகின்றன.   "சிவரஞ்சனியும்...

திருச்சூர் ஆனை ஊட்டு விழா கோலாகலம்!

0
-ஜிக்கன்னு, திருச்சூர். கேரளாவில் ஒவ்வொரு வருடமும் கர்க்கட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில்  கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஒரு மாதத்துக்கு நடத்தப்படுவது வழக்கம். கேரள மாநிலம் திருச்சூர் பாலக்காடு எர்ணாகுளம் கோட்டையம்...