பரத நாட்டியம்.. சுதந்திர தின பவள விழா! 

பரத நாட்டியம்.. சுதந்திர தின பவள விழா! 

லண்டனிலிருந்து கோமதி. 

 தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத் 
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன் 
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே 
பாங்கின் எழுதித் திகழும் – செய்ய 
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர் 

என்ற பாரதியின் கனவு மெய்ப்படும் விதமாக இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தன்று பல வீடுகளிலும், தெருக்களிலும் பாரதத் தாயின் மணிக்கொடி பட்டொளி வீசி பறந்தது 

அந்த வகையில் இந்தியாவில் மட்டுமல்லாதுநம் நாட்டின் சுதந்திர தின பவள விழா கொண்டாட்டம் லண்டனிலும் களை கட்டியது. 'இதில் நாங்களும்கலந்து கொள்கிறோம்' என பெருமிதத்துடன் லண்டனை சார்ந்தகலசாகரா யு.கே மற்றும் பாலம் ஆர்ட்ஸ்  ஆகிய அமைப்புகள் இணைந்து சிறப்பான ஒரு நடனநிகழ்ச்சியைஏற்பாடு செய்துதனர்.

இந்திய  சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களைபோற்றும் விதமாக அமைந்தஇந்த நிகழ்ச்சிஆகஸ்ட் 13, 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற்ற்து. "Our country, our heros, our pride" என்னும் தலைப்பில்இணையதளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் ஒளிபரப்பாகி, பலர் கண்டுகளித்தனர் 

கலசாகரா யு.கேஎன்னும் பரத நடனப்பள்ளியை  திருமதி. உஷா ராகவன்லண்டனில் 1997- ல் நிறுவினார்.  

அந்த வகையில் 25 ஆண்டுகளாக தொடர்ந்து கலை சேவை செய்யும் திருமதி. உஷா ராகவன் பரதநாட்டியம்மற்றும் நமது இந்திய கலாசாரத்தை இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடத்திச் செல்வதில்மிக முக்கியமான பங்கு வகிக்கின்றார். லண்டனில் பல்வேறு இடங்களில் பரதநாட்டியம் கற்பிப்பதோடுமட்டுமல்லாது நமது இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தைதனது மாணவிகளுக்குவலியுறுத்துவதை தனது தலையாய கடமையாகக்கொண்டுள்ளார் 

பல்வேறு கலை நிகழிச்சிகளைத்தொடர்ந்து நடத்தி வரும் இவர் "பாலம் ஆர்ட்ஸ்" என்னும் அமைப்புடன் இணைந்து "Unite for India" என்ற தலைப்பில் 24 மணி நேரம் தொடர்ந்து "Dance Marathon" நிகழ்த்தி கொரோனா நிதி திரட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார்இந்தியப் பெண்களை ஊக்குவிக்கும் அமைப்பான Inspiring Indian Women (IIW) என்ற அமைப்பு உஷா ராகவனுக்கு 'சிறந்த பெண்மணி' என்ற விருது அளித்துள்ளது. இதுதவிர மேலும் பல விருதுகளும் கிடைக்கப் பெற்ற்வர் இவர் 

பாலம் ஆர்ட்ஸ் சிஐசி என்பதுகிருஷ்ணப்ரியா ராமமூர்த்தி அவர்களின் தலைமையில் நிறுவப்பட்ட பல்வேறு கலாச்சார நிகழ்வுக்கான காட்சி கலை அமைப்பாகும். இந்நிறுவனம் தெற்காசிய கலை வடிவங்களுக்குமுக்கியத்துவம் வழங்கும் அதே நேரத்தில் பல்வேறு பின்னணியில் இருந்து வரும் இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதை முதன்மையாகக் கொண்டுள்ளனர். 

கலைத்துறையை சேர்ந்த இந்த இரு ஜாம்பவான்களும்இணைந்து இம்மாதம் முற்றிலும் ஒரு புதிய முயற்சியாக இந்நடனநிகழ்வைஏற்பாடு செய்தனர்.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின்தியாகம், வீரம் மற்றும் அவர்களைப் பற்றியஅரிய தகவல்களை ஆகஸ்ட் 15 – சுதந்திர தினத்தன்று கலாசாகராமாணவிகளின்நடன நிகழ்ச்சியின் மூலமும்நடத்திக் காட்டினர். அதில் சுதந்திரப் போடராட்டத் தலைவர்கள் திலகர், சரோஜினி நாயுடு, வேலு நாச்சியார், சிதம்பரம் பிள்ளை, ராணி லட்சுமி பாய், கொடி காத்த குமரன், அல்லூரிசீதா ராமா ராஜு, தன்குடுரிபிரகாசம் என பலரையும் பற்றி இந்த ந்டன நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது 

பிரிட்டனில் வசிக்கும் நம் இந்தியக் குழந்தைகள் நம் தேசத்தைப் பற்றியும் தேசத் தலைவர்கள் பற்றியும் அறிந்து கொள்ளும் அருமையான வாய்ப்பாக இந்த நடன நிகழ்ச்சி அமைந்தது என்றால் மிகையில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com