0,00 INR

No products in the cart.

சர்வதேச நீச்சல் போட்டி : தங்கம் வென்றார் நடிகர் மாதவன் மகன்!

-ஜிக்கன்னு.

டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
நடிகர் மாதவன் மகன் வேதாந்த் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினார்.
மேலும் வேதாந்த் 2026-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். தனது மகன் மற்றும் மனைவியுடன் துபாய் நாட்டில் தங்கியுள்ள மாதவன் அங்கு தனது மகனுக்கு சிறந்த பயிற்சியாளரை கொண்டு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்கேற்றுள்ளார். இதில் ஆடவருக்கான 800 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் வேதாந்த், பந்தய தூரத்தை 8:17.28 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இது  வேதாந்த் வெல்லும 2-வது பதக்கம் ஆகும். கடந்த சனிக்கிழமை நடந்த 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
வேதாந்த், தங்கப் பதக்கம் வென்ற பரிசளிப்பு வீடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
‘‘ வேதாந்துக்கு தங்கப் பதக்கம், கிடைத்துள்ளது.  உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும், கடவுளின் மிகப் பெரிய ஆசீர்வாதத்துடனும் வேதாந்தின் வெற்றி தொடர்கிறது. பயிற்சியாளர் பிரதீப்குமார் மற்றும் இந்திய நீச்சல் கூட்டமைப்பு அளித்த ஆதரவுக்கு நன்றிகள்”
– இவ்வாறு நடிகர் மாதவன்  தெரிவித்துள்ளார்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பரத நாட்டியம்.. சுதந்திர தின பவள விழா! 

0
-லண்டனிலிருந்து கோமதி.   தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்  தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்  ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்  உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே  பாங்கின் எழுதித் திகழும் – செய்ய  பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்  என்ற...

இளைஞர் வாழ்வுதனை கவ்வும் ஆன்லைன் சூதாட்டம்! 

0
-தனுஜா ஜெயராமன்    மகாபாரதத்திலேயே சூதினால் பஞ்ச பாண்டவர்கள் இழந்தது ஏராளம் எனில் சூதின் கொடுமைகளை இதைவிட விளக்கமாக யாராலும் சொல்லிவிட முடியாது.   சீட்டாட்டம் ,குதிரைபந்தையம், லாட்டரி சீட்டுகள்  என பல்வேறு காலகட்டங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் பல...

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

0
டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி...

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

0
-லதானந்த்   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

0
-பிரமோதா, சக்தி.சாமிநாதன். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது ‘’தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க...