0,00 INR

No products in the cart.

வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் அசத்தும் ஆசிரியர்!

– ஜிக்கன்னு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும் வாட்டர் ஆப்பிள் பழ சாகுபடியை தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் செய்து அசத்துகிறார்.

தர்மபுரியில் அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் சரவணன், வாட்டர் ஆப்பிள் செடிகள் வளர்ப்பது குறித்து பேசினார்.

‘’வழக்கமான விவசாயத்தை செய்வதற்கு பதில் மாற்று விவசாயத்தை ஏன் செய்யக்கூடாது என்ற ஆர்வத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஒசூரிலுள்ள நர்சரி ஒன்றில், நூறு வாட்டர் ஆப்பிள் செடிகளை வாங்கி வந்தேன். எங்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தில் இந்த வாட்டர் ஆப்பிள் செடிகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தேன்.

இரண்டே வருடங்களில் வாட்டர் ஆப்பிள் பழங்கள் அறுவடைக்கு வந்தன. வருடத்தில் மூன்று முறை விளைச்சல் கிடைக்கிறது, வியாபாரிகளும் பொதுமக்களும் இங்கே நேரிடையாக வந்து வாங்கி செல்வதால் விற்பனையும் நன்றாகவே இருக்கிறது, சிகப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட இரண்டு வகையான வாட்டர் ஆப்பிள் வகைகளை என் தோட்டத்தில் நடவு செய்துள்ளேன்.’’ என்கிறார் சரவணன்.

சராசரியாக ஒரு கிலோ வாட்டர் ஆப்பிளின் விலை ஐம்பது ரூபாய் என கணக்கிட்டால் நூறு செடிகளிலும் வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறதாம்.  மீதமுள்ள நிலத்தில் கொய்யா, மாதுளை, முள்சீத்தா, அத்தி போன்ற பழ வகைகளையும் பயிரிட்டுள்ளார் சரவணன். மேலும் வாட்டர் ஆப்பிள் செடிகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனையும் செய்கிறார்.

‘’இந்த பழத்தின் பெயர் வாட்டர் ஆப்பிள் என்றூ இருந்தாலும்,ஆப்பிளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மருத்துவ குணங்கள் நிரம்பிய இந்த பழம், நீர்ச்சத்து நிரம்பி தாகத்தை தணிக்கக் கூடியது.’’ என்கிறார் சரவணன்.

மலை பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய வாட்டர் ஆப்பிளை தருமபுரி போன்ற சமநிலங்களிலும், இங்குள்ள பருவநிலையிலும் விளைவிக்கமுடியும் நிரூபித்திருக்கிறார் சரவணன்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பரத நாட்டியம்.. சுதந்திர தின பவள விழா! 

0
-லண்டனிலிருந்து கோமதி.   தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்  தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்  ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்  உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே  பாங்கின் எழுதித் திகழும் – செய்ய  பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்  என்ற...

இளைஞர் வாழ்வுதனை கவ்வும் ஆன்லைன் சூதாட்டம்! 

0
-தனுஜா ஜெயராமன்    மகாபாரதத்திலேயே சூதினால் பஞ்ச பாண்டவர்கள் இழந்தது ஏராளம் எனில் சூதின் கொடுமைகளை இதைவிட விளக்கமாக யாராலும் சொல்லிவிட முடியாது.   சீட்டாட்டம் ,குதிரைபந்தையம், லாட்டரி சீட்டுகள்  என பல்வேறு காலகட்டங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் பல...

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

0
டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி...

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

0
-லதானந்த்   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

0
-பிரமோதா, சக்தி.சாமிநாதன். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது ‘’தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க...