பித்த வெடிப்பு குணமாக !

பித்த வெடிப்பு குணமாக !
Published on
  • தேன் மிகச்சிறந்த ஆன்டி-பயாடிக். எனவே இது குதிகால் வெடிப்பை சரிசெய்வதில் சிறந்தது. ஒரு கப் தேனை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் சேர்த்து, அதில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகும்.

  • அசிட்டிக் பண்புகள் நிறைந்த எலுமிச்சையுடன் வேஸ்லினை சேர்த்து கலந்து குதிகால் வெடிப்பில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

  • விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

  • மருதாணி குளிர்ச்சி தன்மை உள்ளது. மருதாணி இலையுடன் மஞ்சள் தூள் சேர்த்து பித்த வெடிப்பு இருக்கும் பகுதில் அப்ளை செய்யுங்கள். பின்னர் காய்ந்ததும் தண்ணீரில் கழுவி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

  • வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

  • பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அது உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

  • வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

  • பேக்கிங் சோடாவை 3 மேசைக் கரண்டி தண்ணீரில் கலந்து கால்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் சொர சொரப்பான கல்லைக் கொண்டு கால்களை நன்கு தேய்க்க குதிகால் வெடிப்பு நீங்கி, அழுக்கு மற்றும் இறந்த செல்களும் நீங்கும்.

  • கால்களை 5 நிமிடம் வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து சொர சொரப்பான கல்லினால் தேய்த்து இறந்த செல்களை நீக்கி விடுங்கள். பின் கற்றாழை ஜெல்லை கால்களில் நன்குத் தேய்க்கவும். ஜெல்லைக் கழுவாமல் இரவு முழுவதும் சாக்ஸ் அணிந்து தூங்கி விடுங்கள். இப்படிதினமும் செய்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

  • தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com