இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதனையடுத்து 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம் என்ன தெரியுமா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி விளையாடிய கொழும்பு மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானம். இது இந்திய அணிக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக ரோஹித் ஷர்மா போட்டி ஆரம்பிக்கும் முன்னரே இதுபற்றி கூறினார். இலங்கை அணியில் இருக்கும் ஸ்பின்னர்கள் இந்திய அணி வீரர்களுக்கு ஒரு சவாலாக மாறினார்கள்.
ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரைத் தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை. விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறி வருகிறார். இளம் வீரர்கள் கில், ஸ்ரேயஸ் ஆகியோர் இந்திய மண்ணிலேயே ஸ்பின்னர்களை எதிர்க்கொள்ள தடுமாறுவார்கள்.
ஆனால், இந்திய அணியில் ஸ்பின்னர்களை நன்றாகவே எதிர்க்கொள்ளும் வீரர்கள் உள்ளனர். அவர்களை தேர்ந்தெடுக்காமல் விட்டத்தற்கு, ரசிகர்கள் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு ஆணையத்தை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவில் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்க்கொள்ளும் முதன்மையான வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட் முக்கியமானவர். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளில் ஸ்பின்னர்களை ஸ்டெப் அவுட் செய்து சச்சின் பாணியில் பொளந்து கட்டுவது ருதுராஜ் மட்டும் தான்.
கடந்த ஐபிஎல் தொடரில்கூட ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்த ஆஃப் திசையில் 5 ஃபீல்டர்கள் நின்றாலும், அசால்ட்டாக நின்று ஆடியவர் ருதுராஜ். ஆனால், இவரை சப்ஸ்ட்டிட்யூட் வீரராக கூட தேர்வுசெய்யவில்லை என்பதே தேர்வுக்குழுவின் மிகப்பெரிய தவறு என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதற்கு பலனாகத்தான் இலங்கை அணிக்கு எதிரான ஸ்பின்னர்களிடம் 9 விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியை சந்தித்துள்ளது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
கவுதம் கம்பீரின் இலங்கை அணிக்கு எதிரான திட்டங்கள், டி20 போட்டிகளில் சிறப்பான வெற்றியில் முடிந்தது என்றாலும், ஒருநாளில் சொதப்பல் ஏற்பட்டுவிட்டது என்றே கூறவேண்டும். இனி வரும் போட்டிகளில் இது போன்ற தவறுகளை சரி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.