சர்வதேச மல்யுத்த போட்டி; வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா!

சர்வதேச மல்யுத்த போட்டி; வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா!

செர்பியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றுள்ளார்.

 செர்பியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா புயெர்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை 11-9 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பர்மிங்ஹாம் காமன்வெல்த் தங்கப்பதக்க வீரரான புனியா, காலிறுதியில் மைக்கேல் டயாகோமிஹாலிஸ் என்ற வீரரிடம் 10-0 என்ற கணக்கில் தோல்வியுற்றார். ஆனால், மைக்கேல் 65 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால் புனியா ரெபிசாஜ் ரவுண்டுக்கு தகுதி பெற்றார். 

ரெபெசாஜ் சுற்றில் அமெரிக்க வீரர் வாஸ்ஜென் டெவன்யன் என்பவரை பரபரப்பான ஆட்டத்தில் 7-6 என்று புனியா வீழ்த்தி வெண்கலச் சுற்றுக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் வினேஷ் போகட் வெண்கலம் வென்றுள்ளார். இதையடுத்து இந்த தொடரில் இந்தியாவுக்கு மொத்தம் 2 வெண்கலம் கிடைத்துள்ளது குறிப்பிட்டத் தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com