கண்ணீரோடு டென்னீஸிற்கு விடை கொடுத்த பெடரர்!

Roger Federer
Roger Federer

நேற்று டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஜர் பெடரர் தனது கடைசி போட்டியில் இறுதியில் கண்ணீருடன் விடைபெற்றார்.

இதுவரை அதிகமுறை விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர் ரோஜர் பெடரர்.


40 பிளாக்பாஸ்டர் போட்டிகளில் நடாலுக்கு எதிராக விளையாடியுள்ள பெடரர்  நேற்று
ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடினார்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோஜர் பெடரர், நேற்று தனது கடைசி போட்டியில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடியது பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை கிளறியது.

Roger Federer
Roger Federer

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தனது 24 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

தனது ஸ்டைலான ஆட்டத்தால் டென்னிஸ் மீது ரசிகர்களுக்கு காதலை வரவழைத்தவர் ரோஜர் பெடரர் வலது முழங்கால் காயத்துக்காக மேற்கொண்ட அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகள் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக அவரால் பெரிதாக டென்னிஸில் பங்கேற்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் விளையாட்டு மைதானத்தில் எழுந்த பலத்த  கரவொலிகளுக்கிடையே  கண்ணீரோடு சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com