
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி சீனாவில், ஹாங்ஜுவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த தற்காப்பு ஆட்டக்காரர் சந்தேஷ் ஜிங்கானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சிங்லென்சனா சிங் மற்றும் லால்சுங்னுங்கா ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதன் மூலம் ஆசிய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி பலம் பொருந்தியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் செளபே கூறுகையில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். ஜிங்கான், சுநீல் சேத்ரி இருவரும் அணியின் தாக்குல் ஆட்டம், தற்காப்பு ஆட்டத்துக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்றார். மேலும் அணியில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர்களும் உள்ளனர். இது எங்களுக்கு பலம்தான் என்றும் செளபே தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 21 இல் தொடங்குவதாக இருந்த இந்தியன் சூப்பர் லீக்போட்டி அட்டவணைகளை திருத்தியமைத்தற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தேதிகள் குளறுபடியால் அணிக்கான வீர்ர்களை தேர்ந்தெடுக்க முடியாத இருந்த நிலைமாறி இப்போது அணி வீர்ர்களை அறிவிக்க முடிந்துள்ளது. இதற்காக அகில இந்தி கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் செளபே கூறினார்.
ஆசிய போட்டிக்கு பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டிமாக் கூறுகையில் ஆசிய போட்டிக்கான இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீர்ர்கள் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி விவரம்:
குர்மீத் சிங், தீரஸ் சிங் மொய்ராங்தம் (இருவரும் கோல் கீப்பர்கள்). சுமித் ரதி, நரேந்தர் கலோட், தீபர் டாங்ரி, சந்தேஷ் ஜிங்கான், சிங்லென்சனா சிங், லால்சுங்னுங்கா, அமர்ஜித் சிங் கியாம், சாமுவேல் ஜேம்ஸ் லிங்டோ, ராகுல் கே.பி., அப்துல் ரபீக், தேவ் சேத்ரி, பிரைஸ் மிராண்டா, அப்ஸர் நூரணி, வின்சி பாரெட்டோ, சுநீல் சேத்ரி, ரஹீம் அலி, ரோஹித் தானு, குர்ராத் சிங், அனிகெட் ஜாதவ்.
தலைமை பயிற்சியாளர்: இகோர் ஸ்டிமாக்.