ஆசியக் கோப்பை: 'பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் இல்லை' டிராவிட் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை: 'பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் இல்லை' டிராவிட் அறிவிப்பு!

சியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.

இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி இன்று இலங்கைக்குப் புறப்பட்டு செல்கிறது. முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பயிற்சியாளர் டிராவிட், ‘இந்திய அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், இந்த பயிற்சி முகாமில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டது. காயத்திலிருந்து கே.எல்.ராகுல் முழுமையாக குணமடைந்து விட்டதாகக் கூறிய ராகுல் டிராவிட், விக்கெட் கீப்பிங், பேட்டிங் மற்றும் பில்டிங் பயிற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறினார். ஆனாலும், உலகக் கோப்பை தொடர் வரவிருப்பதால் கே.எல்.ராகுலை வைத்து விபரீத முயற்சிகள் எடுக்க விரும்பவில்லை. கே.எல்.ராகுலுக்கு இன்னும் ஒரு வாரம் ஓய்வு அளித்தால் அது அவருடைய செயல்பாட்டை இன்னும் அதிகரிக்கும் என்பதால், ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் ராகுல் விளையாட மாட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர், ‘ஸ்ரேயஸ் ஐயர் முழு உடல் தகுதியை பெற்று விட்டதாகவும் அவரது பயிற்சி திருப்திகரமாக இருந்ததாகவும் டிராவிட் கூறினார். முதல் இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார் என டிராவிட் அறிவித்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக நடு வரிசையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com