உலக தடகளம்:இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா!

Neeraj chopra
Neeraj chopra

லக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும் இந்திய ஈட்டி எறிதல் வீர்ருமான நீரஜ் சோப்ரா. இதன் மூலம் அவர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.

நீரஜ் சோப்ரா தவிர, மேலும் இரு இந்திய வீர்ர்களான டி.பி.மானு மற்றும் கிஷோர் ஜெனா ஆகியோரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

1983 ஆம் ஆண்டு முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பங்கேற்று வரும் நிலையில், ஒரு விளையாட்டின் இறுதிச்சுற்றுக்கு 3 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 7-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, டி.பி.மானு, கிஷோர் ஜெனா ஆகியோர் பங்கேற்றனர்.

தகுதிச்சுற்றில் 83 மீட்டரை எட்டும் 12 பேருக்கு இறுதிச்சுற்று வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் பாரீஸ் ஒலிம்பிக் தகுதி 85.50 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு போட்டியாளருக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படும். நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார். இதையடுத்து அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

மானு 81.31 மீட்டரும், கிஷோர் 80.55 மீட்டரும் ஈட்டி எறிந்து தகுதிச் சுற்றில் 6 மற்றும் 9-வது இடத்தை பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருமே முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று இந்தியர்களும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் பங்கேற்கிறார்கள். “பயிற்சியின்போதே நான் சிறப்பான ஆற்றலுடன் செயல்பட்டதால் இறுதிச்சுற்று வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். இறுதிச்சுற்றில் பங்கேற்று நிச்சயம் தங்கம் வெல்ல முடியும் என எதிர்பார்க்கிறேன்” என்றார் நீரஜ் சோப்ரா.

நடப்புச் சாம்பியன் கிரெனாடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 78.49 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டி எறிந்து தகுதிச் சுற்றிலிருந்து வெளியேறினார்.

ஒலிம்பிக் (2021), ஆசிய விளையாட்டு போட்டி (2018), காமன்வெல்த் (2018) போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை தங்கம் வென்றதில்லை. கடந்த போட்டியில் அவர் வெண்கலம் மட்டுமே வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com