ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு வைபவம் திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்டல் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும். நெற்றிச்சுட்டி, தலைநாகர், தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன் சவுரி தரித்துக் காட்சி தரும் ஆண்டாளை தலையில் அணிந்துள்ள ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து தலையைக் கோதி, சிடுக்கு நீக்கி, சுகந்த தைலம் சாத்துவர்.