0,00 INR

No products in the cart.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் 23ஆம் தேதி இரவு தொடங்கும் ஆண்டாள் நீராட்டல் உத்ஸவம், தை மாதப் பிறப்பு வரை கொண்டாடப்படும். ஸ்ரீஆண்டாள் நீராட்டல் உத்ஸவத்தின் இரண்டாம் நாள் கள்ளழகர் திருக்கோலம், மூன்றாம் நாள் கண்ணன் கோலம், நான்காம் நாள் முத்தங்கி சேவை, ஐந்தாம் நாள் பெரிய பெருமாள் கோலம், ஆறாம் நாள் மகாராணியாக அமர்ந்த கோலம், ஏழாம் நாள் தங்கக் கவச சேவை என ஆண்டாள் தரிசனம் தருவாள்.

Previous articleதிருப்பாவையில் ஆண்டாள் ஒவ்வொரு பாடலையும், ‘ஏலோர் எம்பாவாய்’ எனப் பாடி முடிப்பாள். இதை ஏல் + ஓர் = எம்பாவாய் எனப் பிரிப்பார்கள். இந்தச் சொல்லுக்கு ‘அன்பிற்குரிய தோழியே’ என ஒரு பொருள் உண்டு. ‘அதிகாலையில் எழுந்தால் கண்ணனின் அருள் கிடைக்கும் என்பதை நன்றாக யோசி’ என தோழிகள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதாகவும் இதற்கு விளக்கம் தருவர்.
Next articleஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு வைபவம் திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்டல் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும். நெற்றிச்சுட்டி, தலைநாகர், தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன் சவுரி தரித்துக் காட்சி தரும் ஆண்டாளை தலையில் அணிந்துள்ள ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து தலையைக் கோதி, சிடுக்கு நீக்கி, சுகந்த தைலம் சாத்துவர்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles