0,00 INR

No products in the cart.

தவறவிட்ட ரயிலில் ஏற்றிவிட்ட ஐயப்பன்!

வாழ்நாளில் இதுவரை முப்பது முறை சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பனை வழிபட்டு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலு என்பவர். ‘சபரிமலை பயணத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம்’ என்று கூறும் அவரிடம், அவற்றில் மறக்க முடியாத ஒரு பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டபோது

இப்போது உள்ளதுபோல், மொபைல், தொலைபேசி வசதிகள் இல்லாத, இருபது வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட அனுபவத்தை இன்று நினைத்தாலும் உடல் சிலிர்ப்பாக இருக்கிறது. நாங்கள் பன்னிரெண்டு பேர் சென்னையிலிருந்து சபரிமலை யாத்திரை புறப்பட்டோம். சென்னையிலிருந்து கோட்டயம் வரை ரயிலில் பிரயாணம். அங்கிருந்து பம்பை வரை வேன் பயணம். பம்பையில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கிறது. வேன் ஓட்டுநர் எங்களை அங்கே இறக்கிவிட்டுவிடுவார். அங்கே வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லாததால் வேன் உடனே கிளம்பி, உத்தேசமாக நாங்கள் தரிசனம் முடித்து வரும் நேரத்திற்கு பம்பைக்கு திரும்ப வரும். தரிசனம் தாமதமாகி, நாங்கள் திரும்ப நேரமாகிவிட்டால், எங்களைத் தேடி வரும் வேன், பம்பையில் நிறுத்த முடியாததால் ஒரு எட்டு கிலோ மீட்டர் தொலைவு சுற்றிவிட்டு திரும்பவும் அடுத்த ரவுண்ட் வரும்போது அதில் நாங்கள் ஏறிக்கொள்வோம்.

பம்பையிலிருந்து ஒரு பாலத்தில் ஏறி இறங்கினால், ‘விரி’ என்று சொல்லப்படும் கடைத்தெரு பகுதியில் நமது மூட்டை, முடிச்சுகளை வைத்துவிட்டு பம்பையாற்றில் குளிக்க வேண்டும். பிறகு சாப்பிட்டதும் சிறிது நேர ஓய்வு. வெய்யில் தாழ, மாலை நாலு மணிக்குக் கிளம்பி நீலி மலை ஏறும்போது மனதில் சுவாமியை எப்போது தரிசனம் செய்வோம் என்ற நினைப்பு மேலோங்க, வாய் ஓயாமல் சரணம் சொல்லியபடியே சென்றோமானால், ஏழு மணிக்கு சன்னிதானம்.

லையில் இருமுடியுடன் பதினெட்டு படியேறி, சபரிமலை நாதனை கண்குளிர தரிசனம் செய்ததும் மனம் நிறைந்துபோக, அறைக்குத் திரும்பி இருமுடியெல்லாம் அவிழ்த்து வைத்து விட்டு, நெய்யை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு காலையில் நெய் அபிஷேகம். வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி, ‘நெய் அபிஷேகப் பிரியனே சரணம் ஐயப்பா!‘ என்று கூறி, மற்றொரு தரிசனம்! பின்பு மாளிகைபுரம் தரிசனம் முடித்து விட்டு, நீலி மலை இறங்கி, வேன் உள்ள இடத்திற்கு வர வேண்டும்.
சபரிமலைக்கு வரும் கூட்டத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? கூட்ட நெரிசலில் சிக்கி, சன்னிதானத்திலிருந்து கிளம்பும்போதே தாமதாகிவிட்டதால், ‘மாலை கோட்டயத்தில் நேரத்திற்கு ரயிலைப் பிடிக்க முடியுமா?’ என்ற கவலையுடன் குறுக்கில், ‘சுப்ரமணியம் பாதை’ வழியாக பரபரப்பாக நடந்து வந்தோம்.

ஏற்கெனவே எங்களைத் தேடி, வேன் ஒரு சுற்று வந்துவிட்டுப் போயிருக்கிறது. மீண்டும் எட்டு கிலோ மீட்டர் தொலைவு சுற்றிவிட்டு, அடுத்த முறை வந்தபோதுதான் வேனில் ஏறிக்கொள்ள முடிந்தது. பம்பாவிலிருந்து கோட்டயம் ரயில் நிலையத்துக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரப் பயணம். கோட்டயம் போய், சென்னை மெயிலைப் பிடிப்பது

சாத்தியமில்லை என்று தெரிந்துபோனதால், எங்களை பதற்றம் தொற்றிக்கொண்டது. அடுத்த நாள் எல்லோரும் சென்னையில் அவரவர் அலுவலகத்திற்குப் போக வேண்டியவர்கள்.

கோட்டயத்திற்கு அடுத்து, சின்ன ஸ்டேஷன் ஒன்றில் மூன்று நிமிடங்கள் ரயில் நிற்கும் என்பது தெரிந்து, வேன் ஓட்டுனர் குறுக்குப் பாதையில் ரப்பர் எஸ்டேட் வழியாக வேனை வேகமாக ஓட்டிக்கொண்டு போனார். எல்லா வயதினரும் உள்ள எங்கள் குழுவில் வயதில் பெரிய ஐயப்பமார்கள் ஐயப்பனையே வாய் ஓயாமல் துதித்துக்கொண்டு வர, சிறியவர்களாகிய மற்றவர்களும் வேறு பேச்சு இல்லாமல், ‘சென்றுவிட்ட ரயிலைப் பிடிக்க அருள் செய் ஐயப்பா’ என்று மனமுருக சுவாமி ஸ்மரணையிலேயே பயணித்தோம்.

அந்த சின்ன ஸ்டேஷனிலிருந்து ரயில் மீண்டும் புறப்படத் தயாராகிறது. பச்சைக் கொடியும் காண்பித்தாகி விட்டது. வேன் வந்து நின்ற இடம் ரயில்வே ப்ளாட்பார்மிற்கு எதிர்பக்கம். நாங்கள் அனைவரும் மெதுவாக ஓட ஆரம்பித்த ரயிலில் ஒவ்வொருவராக ஏறிக்கொண்டோம். எல்லோரும் ஏறி விட்டார்கள் என்று தெரிந்ததும்தான் எங்களுக்கு மூச்சே வந்தது.

தில் இன்னொரு வியப்பு என்னவென்றால், சபரிமலைக்குக் கிளம்புவதற்கு முன்புதான் எனது வலது உள்ளங்கையில் ஒரு அறுவை சிகிச்சையாகி கைவிரல்களை சரிவர உபயோகப்படுத்த முடியாமல் இருந்தது. எப்படி அந்தக் கையை வைத்துக்கொண்டு ஓடும் ரயிலில் ஏறினேன் என்பது, இன்றுவரை எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. வேகமாக ஏறியதில் எந்த கம்பார்ட்மெண்டில் இருக்கிறோம் என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தபோது, நாங்கள் முன்பதிவு செய்திருந்த அதே எஸ்-8 கம்பார்ட்மெண்ட்டில்தான் இருக்கிறோம் என்பது தெரிய வந்தது.

சரியான நேரத்தில், நாங்கள் ஏறவேண்டிய கம்பார்ட்மெண்டிலேயே எங்களை ஏற்றிவிட்ட ஐயப்பனின் அளவில்லாத கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து போனோம். அதை இன்று நினைத்தாலும் மனம் வியப்பில் லயிக்கும்” என்று சிலிர்ப்போடு தனது சபரிமலை யாத்திரை பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் ஐயப்ப பக்தர் பாலு.

தொகுப்பு : ரேவதி பாலு

1 COMMENT

  1. மெய் சிலிர்க்க வைத்தது தங்களின் புனித பயணத்
    தின் அனுபவம். நம்பியவர்களைக் கைவிடமாட்டார்
    சபரிமலையார் என்பதும் தெளிவாக விளங்கிற்று.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

மாப்பிள்ளை குப்பத்து மணப்பெண்!

- ரேவதி பாலு கொரோனா ஊரடங்கு வந்தாலும் வந்தது வீட்டை விட்டுக் கிளம்பவே முடியாமல் ஜெயில் வாழ்க்கை. தற்போது கெடுபிடிகள் குறைந்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டதால் மூன்று வருடங்களாகப் போக முடியாத குலதெய்வம் கோயிலுக்குச்...

​அம்பிகையின் அருள்!

0
- வி.ரத்தினா, ஹைதராபாத் எனது அண்ணி அம்பாளின் மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். தினமும் பூஜைகள் செய்து அம்மனைப் போற்றி பல பாடல்களை உருக்கமாகப் பாடுவார். அதுமட்டுமின்றி; எப்போதும் அம்பாளின் நினைவுடனே இருப்பார்....

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...