0,00 INR

No products in the cart.

தினமும் ஒலிக்கும் தேசிய கீதம்: பொதுமக்கள் வணக்கம் செலுத்தி மரியாதை!

-காயத்ரி.

தெலுங்கானா மாநிலம் ஜிம்மி குண்டாவில் தினமும் காலையில் 8 மணிக்கு ஒலிபெருக்கி மூலம் தேசிய கீதம் ஒலிபரப்பு செய்யப் படுகிறது. அச்சமயம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வண்டிகளை நிறுத்திவிட்டு, பாடல் முடியும்வரை அப்படியே நின்று மரியாதை செய்கின்றனர்.

ஹைதராபாத்திலிருந்து 145 கி.மீ தொலைவில் உள்ளது ஜம்மிகுண்டா நகரம். இங்கே தினசரி காலை 8 மணிக்கு நகரின் பேருந்து நிறுத்தம் அருகே  16 பகுதிகளில் ஒரே நேரத்தில் ஒலிபெருக்கிகள் மூலமாக தேசிய கீதம் ஒலிபரப்பாகிறது. அந்த நேரத்தில் நகரப் பேருந்துகள் இயக்கப் படாது. மேலும் அருகேயுள்ள வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள், சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள் ஆகியோரும் பாடல் முடியும்வரை அந்தந்த இடத்தில் அப்படியே அசையாமல் நின்று வணக்கம் செலுத்தி தேசிய கீதத்திற்கு மரியாதை செய்கின்றனர். இந்த நிகழ்ச்சி 2017-ல் தொடங்கி தினமும் நாள்தவறாமல் நடக்கிறது.

2017-ல் இப்பகுதியில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பிரசாத் ரெட்டி  இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்

‘’நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும், பொது மக்களிடையே நாட்டுபற்று ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றும் இப்படி தினமும் தேசிய கீதத்தை ஒலிபரப்ப விரும்பினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது’’ என்கிறார், இருந்த இன்ஸ்பெக்டர் பிரசாத் ரெட்டி.

அந்த வகையில் ஜம்மிகுண்டாவில் இன்றும் தினந்தோறும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு பொது மக்கள் 52 வினாடிகள் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது.

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

வைரமுத்து திறந்து வைத்த புத்தக வளாகம்! 

0
-லதானந்த்  சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர்.நல்லகண்ணு தலைமையில், கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட் 12-ம்...

விருமன் விறுவிறுப்பு கம்மி!   

0
-ராகவ் குமார் .    தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்க, நமது முத்தையா மட்டும் குடி பெருமை,செண்டிமெண்ட், சொந்தத்திற்குள் திருமணம் என விருமனில் கதை விட்டு இருக்கிறார்.      தாசில்தாராக இருந்து...

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைப்பில் ‘ஹர் கர் திரங்கா’ ! 

0
-லதானந்த்.  'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல், வெளியிடப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.   தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும்...

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

0
-காயத்ரி.  மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண...