திருநீறு நாலுவகைப்படும். கல்பம்- கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழுமுன் தாமரையிலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச, பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதற்கு ‘கல்பம்’ என்று பெயர். இத் திருநீறு வைத்தீஸ்வரன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று விற்பனை செய்யப்படுகிறது.