திருப்பாவையில் ஆண்டாள் ஒவ்வொரு பாடலையும், ‘ஏலோர் எம்பாவாய்’ எனப் பாடி முடிப்பாள். இதை ஏல் + ஓர் = எம்பாவாய் எனப் பிரிப்பார்கள். இந்தச் சொல்லுக்கு ‘அன்பிற்குரிய தோழியே’ என ஒரு பொருள் உண்டு. ‘அதிகாலையில் எழுந்தால் கண்ணனின் அருள் கிடைக்கும் என்பதை நன்றாக யோசி’ என தோழிகள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதாகவும் இதற்கு விளக்கம் தருவர்.