0,00 INR

No products in the cart.

சர்வதேச கராத்தே போட்டி: தமிழக மாணவர்களுக்கு 12 தங்கப் பதக்கம்! 

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் கலந்து கொண்டு 12 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

மலேசியாவின் ஈப்போ நகரில் 18-வது சர்வதேச கராத்தே போட்டி கடந்த மே மாதம் 27ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து ஆல் இந்தியா கராத்தே டோ கோஜு ரியு அசோசியேசன் சார்பில் 12 பேர் கலந்துகொண்டு 21 பிரிவுகளில் விளையாடி மொத்தம் 12 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றிவாகை சூடி நேற்று (ஜூன் 1) சென்னை விமான நிலையம் வந்த இந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்த வெற்றி குறித்து பயிற்சியாளர் சீனிவாசன் கூறியதாவது;

மலேசியாவில் கராத்தே போட்டி கடுமையாக இருந்தது ஆனாலும் மாணவர்கள் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழக அரசு உதவி செய்தால் அடுத்து வரும் காமன்வெல்த் ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வார்கள். சிலம்பம் கலைக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்தது போல் கராத்தே கலைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பதக்கங்களை வென்ற மாணவர்கள் கூறிம்போது ‘எங்களில் நிறைய பேர் அரசு பள்ளிகளில் தான் படித்து வருகிறோம். கடினமாக உழைத்து கராத்தேயில் தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்பாதுகாப்புக்காக  அனைவரும் கராத்தே பயில வேண்டும்’’ என்றனர்..

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைப்பில் ‘ஹர் கர் திரங்கா’ ! 

0
-லதானந்த்.  'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல், வெளியிடப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.   தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும்...

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

0
-காயத்ரி.  மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண...

நான்கு கதை, நான்கு திசை, நான்கு பார்வை! 

0
-ராகவ் குமார்.   சோனி லைவ் தளத்தில் வெளியான ‘விக்டிம்’  திரைப்படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்த ஒரே திரைப்படத்தில் 4 வெவ்வேறு கதைகளை 4 பெரிய இயக்குனர்களான பா. ரஞ்சித், எம் . ராஜேஷ்,  சிம்பு...

போர் ஊற்றி எழுதிய காதல் காவியம் ‘சீதா ராமம்’! 

0
-லதானந்த்  நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம், ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ்,...