சாக்லேட் எடு; கொண்டாடு!

சாக்லேட் எடு; கொண்டாடு!

ஜூலை 7: சர்வதேச சாக்லேட் தினம்

லகில் மாயன் இன மக்கள் காலத்திலேயே சாக்லேட்  கண்டுபிடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஐரோப்பியாவில் 1550- ஆண்டு ஜூலை 7-ம் தேதி உலக மக்களுக்கு சாக்லேட்டை அறிமுகப்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன. அதனால் கடந்த 2009 முதல் ஆண்டுதோறும் ஜூலை 7-ம் தேதி உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.

மெக்ஸிகோவில் Xocolati என்ற வார்த்தையிலிருந்து சாக்லேட் என்ற பெயர் உருவானது. கோக்கோ விதையிலிருந்து உருவாகும் சாக்லேட்டை ஆரம்பகாலத்தில் பானமாக தயாரித்து பருகி வந்தனர். குறிப்பாக அரசர்களின் விருந்துகளில் சாக்லேட் பானம் முக்கிய உணவாக இடம் பெற்றிருந்தது. இந்த பானம் சற்றே கசப்புச் சுவையுடன் இருந்தாலும், குடித்தபின் உடனடியாக உற்சாகமும் சுறுசுறுப்பும் ஏற்பட்டதால், விரும்பி பருகினார்களாம்.

பின்னர் கோக்கோ விதையுடன் தேன், பால், பழம் போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட ஆரம்பித்தனர். பின்னர் படிப்படியாக வென்னிலா எஸன்ஸ், மணமூட்டிகள் எல்லாம் சேர்க்கப்பட்டு, இப்போதைய சாக்லேட்டாக உருமாற்றம் அடைந்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com