0,00 INR

No products in the cart.

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார்.

மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்த அமித் ஷா, கொல்கத்தாவின் விக்டோரியா மெமோரியல் ஹாலில் அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ‘முக்தி-மாத்ரிகா’ எனும் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமித் ஷா சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மனைவி டோனா கங்குலியும் அவரது திக்ஷா மஞ்சரி குழுவினரும் நடனம் ஆடினர்.

பின்னர் அமித் ஷாவுக்கு சவுரவ் கங்குலி தன் இல்லத்தில் சைவ உணவு விருந்தளித்தார்.

“எனக்கு அமித் ஷாவை 2008-ம் வருடம் முதல் தெரியும். பிசிசிஐ-யில் அவர் மகன் என் நண்பர். அதனால் அமித் ஷாவின் மகன் கொல்கத்தாவில் எங்கள் வீட்டிற்கு வரும்போது எங்களுடன் இரவு உணவு சாப்பிடுவார். அவரும் சரி..அமித் ஷாவும் சரி.. சைவ உணவுதான் சாப்பிடுவார்கல் என்பதால், அதையே விருந்துக்கு தயார் செய்தோம்” என்றார் கங்குலி.

சவுரவ் கங்குலியின் இல்லத்துக்கு பிஜேபி தலைவர்கள் சுவேந்து அதிகாரி மற்றும் அமித் மால்வியா ஆகியோருடன் அமித் ஷா வருகை தந்திருக்கிறார். அது சரி.. விருந்தில் பரிமாறப்பட்ட ஐட்டங்கள் என்னென்ன?!

அமித் ஷாவுக்கு பிடித்தமான அரிசி சாதம், ரொட்டி, லூச்சி, பேகன் பாஜா, ஷாஹி பன்னீர், தால் மக்கானி, தம் ஆலு, வெஜ் கட்லெட், காஜூ பர்ஃபி, மிஷ்டி தோய், ரஸகுல்லா ஆகியவை கங்குலி வீட்டு விருந்தில் பரிமாறப்பட்டன.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாய்தா; எளியவர்களுக்கு மறுக்கப்படும் நீதி!

0
 -ராகவ் குமார் உலக சினிமா எல்லாமே அந்தந்த மண்ணின் பிரச்சனைகளை திரையில் பேசும் படம்தான். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் வாய்தா. இந்த படம் நமது...

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியில் புதிய படம்!

0
நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியிள் ‘சூர்யா41’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில்...

விக்ரம் 2-விலும் லோகேஷ்தான் இயக்குனர்: கமல்ஹாசன் அறிவிப்பு!

0
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது அதில் கமல்ஹாசன் பேசியதாவது: கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி விக்ரம் படம் ரிலீஸாக...

அன்னை இல்லத்திலிருந்து அடுத்த நடிகர்!

0
-லதானந்த். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து மற்றொரு கலையுலக வாரிசு உருவாகியுள்ளார்.  நடிப்புப் பல்கலைக்கழகமான சிவாஜியின் அன்னை இல்லத்திலிருந்து அவரது மகன் பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் போன்றவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது...

நெஞ்சுக்கு நீதி; சமூக நீதிக்கான போராட்டம்!

0
-ராகவ் குமார். ‘ஆர்ட்டிகள் 15’ என்ற இந்தி படத்தின் மைய்ய கருவை எடுத்துகொண்டு தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் ‘நெஞ்சுக்கு நீதி’யை இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.  இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர்...