விக்ரம் பட நடிகைக்கு பாராட்டு விழா!

விக்ரம் பட நடிகைக்கு பாராட்டு விழா!

-லதானந்த்

சைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படம் 'நினைவெல்லாம் நீயடா' ஆகும். இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, கொடைகானலில் நடந்து வருகிறது. 

இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய "இதயமே, இதயமே, உன்னைத் தேடித் தேடி…" என்ற பாடலுக்குக் கதாநாயகன் பிரஜன் மற்றும் கதாநாயகி சினாமிகா பங்குபெற்ற நடனக் காட்சிகளை நடன இயக்குனர் தினேஷ் படமாக்கி வருகிறார். விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற பாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த வசந்தி, பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் உதவி நடன இயக்குனராகப் பணியாற்றுபவர். 

இன்று கொடைக்கானலில், நடிகை வசந்திக்குப் படக்குழுசார்பில் கதாநாயகி சினாமிகா ரோஜா மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்; இயக்குநர் ஆதிராஜன் மலர் கொத்து வழங்கினார். படத்தின் தயாரிப்பாளர் ராயல் பாபு, நடிகர் பிரஜன், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி, ஆர்ட் டைரக்டர் முனிகிருஷ்ணா, மாஸ்டர் தினேஷ்,மேனேஜர் இளங்கோ ஆகியோரும் வாழ்த்தினர். படக்குழுவினர் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com