தமிழ் சினிமாவில் முதல் ரோட் மூவி ‘துரிதம்’!

தமிழ் சினிமாவில் முதல் ரோட் மூவி ‘துரிதம்’!

-லதானந்த்

மிழ் சினிமாவில் இதுவரை பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை. ஆனால் முதன் முறையாக அந்தக் குறையைப் போக்கும் விதமாக உருவாகியுள்ள படம்தான் 'துரிதம்'.  

இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குனர் சீனிவாசன் இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார்.

'சண்டியர்' என்கிற படத்தில் நடித்த ஜெகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக  'மிஸ் சவுத் இந்தியா' பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

புதியவரான நரேஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்ஷன் காட்சிகளை  மணி என்பவர் வடிவமைத்துள்ளார். 

இந்தப் படம் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் தயாரிப்பாளரான படத்தின் நாயகன் 'சண்டியர்' ஜெகன் கூறும்போது, "உளுந்தூர்பேட்டையில் தங்கி, அங்கிருந்து சென்னை, மதுரை கோவை, சேலம் என அனைத்துத் திசையிலும் தினசரி பயணித்துப் படப்பிடிப்பை நடத்தினோம்.

வாகனங்கள் பரபரப்பாகச் சென்றுகொண்டு இருக்கும்போத லைவ்வாகப் படப்பிடிப்பு நடத்தினோம். இதில் ஒரு காட்சியைப் படமாக்கும்போது சிறிய தவறு  நிகழ்ந்தாலும், ரீடேக் எடுப்பதுதான் எங்களுக்குச் சவாலான விஷயமாக இருந்தது. காட்சியைப் படமாக்கிய இடத்துக்கே மீண்டும் சில கிலோமீட்டர்கள் பயணித்துச் சுற்றிவர வேண்டி இருந்தது.

ஒருமுறை மிகவும் சிரமப்பட்டுச் செலவு செய்து ரயில் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றைப் படமாக்கினோம். ஆனால் அந்தக் காட்சியை ஹார்ட் டிஸ்க்கில் காப்பி பண்ணிவிட்டோம் என நினைத்துத் தவறுதலாக அழித்து விட்டார்கள். ஆனால் செலவானாலும் பரவாயில்லை என மீண்டும் அந்தக் காட்சியை மறுநாள் படமாக்கினோம்.   

இந்தப் படத்தை முடித்ததும், இயக்குனர் ஹெச்.வினோத்திடம் படத்தைப் போட்டுக் காட்டினோம். படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாக பாராட்டினார். மேலும், தான் 'சதுரங்க வேட்டை' படம் எடுத்தபோதுகூட, பலதரப்பட்ட கருத்துக்களைச் சொன்னார்கள். அதன் பிறகு பொதுமக்கள் மத்தியில் மிகவும் பாராட்டப்பட்டது.

வழக்கமாக சென்னையில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை அழைத்துச் சிறப்புக் காட்சியைத் திரையிட்டுக் காட்டுவதற்கு பதிலாக திருநெல்வேலி ஆலங்குளத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அந்தப் பகுதி மக்களை அழைத்து இந்தப் படத்தை திரையிட்டுக் காட்டினோம். எங்கள் வேலைக்கான அங்கீகாரம், அந்த சராசரி மக்களின் பாராட்டுக்களிலேயே கிடைத்தபோது இன்னும் நம்பிக்கை ஏற்பட்டது. சென்னையில் சிறப்பு காட்சி திரையிட்டபோதும் அதே ரிசல்ட் கிடைத்ததில் இன்னும் நம்பிக்கை வந்தது.

இதைத் தொடர்ந்து, இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யவேண்டும் என முடிவு செய்தோம். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்" என்று கூறினார் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான 'சண்டியர்' ஜெகன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com