0,00 INR

No products in the cart.

நாட்படு தேறல்  2-ம் பாகம்; ஏப்ரல் 17 முதல் ஒளிபரப்பு!

கவிஞர் வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியின் முதல் பாகம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இப்போது நாட்படு தேறல் நிகழ்ச்சியின் 2-ம் பாகம் . ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்ததாவது;

நாட்படு தேறல் நிகழ்ச்சியின் 2-ம் பாகம் . ஏப்ரல் 17 முதல், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இசையருவி மற்றும் வைரமுத்து யூடியூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது.  இதில் 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தில் தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் இந்நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் 13 பாடல்களோடு 13 வாரங்கள் வெளியாகவுள்ளது. மேல்நாடுகளில் திரைப்படங்களை விட்டுப் பாடல்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டன. தனிப்பாட்டு ஆல்பங்களே மேல்நாடுகளில் உலகப்புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தியாவில் அந்த முயற்சி இப்போதுதான் மெல்ல மெல்ல மலரத் தொடங்கியிருக்கின்றது. தமிழில் அந்த முயற்சியை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.

-இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். ஒவ்வொரு பாடலையும் வைரமுத்து எழுதி, அந்த ஒவ்வொரு பாட்டுக்கும் ஓர் இசையமைப்பாளர், ஒரு பாடகர், ஓர் இயக்குநர் என்று தேர்தெடுத்துப் பாடல் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது. நாட்படு தேறலைக் கவிஞர் வைரமுத்து தயாரித்து வழங்குகிறார்.

“எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்ததில் திரைப்பாட்டுக்குப் பெரும் பங்கிருக்கிறது.  அந்த வகையில் இன்று உலகமெங்கும் இந்த தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் கடமையை நாட்படு தேறல் ஆற்றும் என்று நம்புகிறேன். நாட்படு தேறல் என் சமகாலத்தில் வாழும் உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை.

-இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

விக்ரம் 2-விலும் லோகேஷ்தான் இயக்குனர்: கமல்ஹாசன் அறிவிப்பு!

0
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது அதில் கமல்ஹாசன் பேசியதாவது: கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி விக்ரம் படம் ரிலீஸாக...

அன்னை இல்லத்திலிருந்து அடுத்த நடிகர்!

0
-லதானந்த். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து மற்றொரு கலையுலக வாரிசு உருவாகியுள்ளார்.  நடிப்புப் பல்கலைக்கழகமான சிவாஜியின் அன்னை இல்லத்திலிருந்து அவரது மகன் பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் போன்றவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது...

நெஞ்சுக்கு நீதி; சமூக நீதிக்கான போராட்டம்!

0
-ராகவ் குமார். ‘ஆர்ட்டிகள் 15’ என்ற இந்தி படத்தின் மைய்ய கருவை எடுத்துகொண்டு தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் ‘நெஞ்சுக்கு நீதி’யை இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.  இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர்...

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

0
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘ராஜவம்சம்’...

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...