டெல்லியில் நேற்று 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரஜினி பேசும் போது தன் நண்பர்ர் ராஜாபக்தூர் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியது பலரையும் வியக்க வைத்தது.
–இதுகுறித்து ரஜினி குறிப்பிடும்போது, பெங்களூரில் நான் பஸ் நடத்துநராக இருந்தபோது நண்பர் ராஜ்பகதூர்தான் என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டு கொண்டார். திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார் என்று ரஜினி கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதையடுத்து ரஜினியின் பேச்சு தொடர்பாக அவரது நண்பர் ராஜ்பகதூர் கூறியதாவட்து:
பெங்களூரில் ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக பணியாற்றியபடியே, நாடகங்களிலும் நடித்து வந்தார். அதில் வரது நடிப்பைப் பார்த்துவியந்த நான், அவரை கட்டாயப்படுத்தி திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து முறைப்படி நடிக்க கற்கும்படி வற்புறுத்தினேன். அவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தேன். அங்குதான் இயக்குநர் பாலசந்தர் சார் ரஜினியைப் பார்த்து அவருக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார். தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்குக் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. விழா மேடையில் எனது பெயரை உச்சரித்தது அவனுடைய நன்றியைக் காட்டுகிறது.