0,00 INR

No products in the cart.

மானியம் மட்டும் ஏன் மாதந்தோறும் குறைந்துக்கொண்டே வருகிறது?

வாசகர் கேள்வியும் – வல்லுநர் பதிலும் 

 

தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால்  மானியம் மட்டும் ஏன் மாதந்தோறும் குறைந்துக் கொண்டே வருகிறது?

– நாராயணி, வேலூர்

 
வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார் நிதி ஆலோசகர்
சித்தார்த்தன் சுந்தரம்:

ழக்கமாக, சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள் சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் விலை மாற்றத்திலும் எதிரொலிக்கும். கடந்த ஆண்டு மே மாதம் 30.61 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 2021 மே மாதம், 66.95 டாலராக உயர்ந்துள்ளது. இது வழக்கமான உயர்வுதான். இப்படித்தான் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வந்துள்ளது.

நம் நாட்டில், 28.95 கோடி பேர் சமையல் எரிவாயுவை வைத்து சமைக்கின்றனர். 2014 – 15ல் இந்த எண்ணிக்கை 14.8 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 6 – 7 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 95 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், 2016ல் துவங்கப்பட்ட ”பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” என்ற திட்டமாகும். இதன் மூலம் ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு என்று, எட்டு கோடி புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதற்கான செலவு 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய்.இவர்களுடன் ஏற்கெனவே உள்ள 18 கோடி இணைப்புதாரர்கள், மானியம் பெற தகுதி உடையவர்கள். ஏனெனில், இவர்களின் ஆண்டு வருமானம், 10 லட்ச ரூபாய்க்கும் குறைவாகும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இவர்களுக்கு 805 ரூபாய் சந்தை விலையிலான சமையல் எரிவாயுவுக்கு 252 ரூபாய் மானியமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது, மானியம் இன்றி 805 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.கடந்த 2020ல் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, மானியம் நிறுத்தப்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, பழையபடி மானியம் வழங்கப்படவில்லை. எனினும் இப்போது, பி.எம்.யு.ஒய்., எனப்படும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது. அதுவும் பழைய அளவில் இல்லை; மிகக் குறைவாக. எனவே, இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை குறையாது.

குறைக்க வேண்டும் என கட்சிகள் போராட்டம் நடத்தினாலும், விலை உயர்வுக்கு ஏற்ப, மக்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?

0
வாசகர் கேள்வியும் - வல்லுநர் பதிலும்   உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?       - சந்திர மோகன், வேலூர். வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார் பொதுநல மருத்துவர்  கு. கணேசன்   உடற்பயிற்சிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்குச் சரியான காரணங்கள் இதுவரை வரையறுக்கப்படவில்லை....

வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும்

தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்  வங்கிகளில் டெபாஸிட்களுக்கு வட்டி விகிதங்களை  குறைத்துக் கொண்டே  இருக்கிறார்களே ஏன்? அரசுக்கு மக்கள் வங்கிகளில் சேமிப்பை ஊக்குவிக்க  விரும்பவில்லையா? - சுஹைல் ரஹ்மான், திருச்சி  வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார்    ...

மூங்கில், நண்டு, வாழை, மனிதன்!

3
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன்   இந்த வாரம் மீண்டும் சென்னை விஜயம். காலை நடையில் தி.நகர் ‘ஹாட் சிப்ஸ்’ல் காஃபி சாப்பிடும்போது  விஜயதசமி முடிந்து வாழை தோரணங்கள் வாடி வதங்கி அதன் அடிப் பகுதியில் தண்டு சின்னதாக...

‘அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’

1
lll ஒரு கலைஞனின் பயணம் முடிந்தது - வினோத்   தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நெடுமுடி வேணு, அண்மையில் கொரோனா கொடூரத்துக்குப் பலியானார். கலகலப்பான சுபாவம் கொண்டவரான வேணு, தமது எளிமையான...

ஆரம்பமே அசத்தல்!

0
உங்கள் குரல் சர்வதேச சந்தையின் நிலைக்கேற்ப நம் நாட்டின் எரிபொருட்களின் நிலையை மாற்றி அமைக்கும் முறை குழித்தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது என்று சாடிய "பிரதமரே கருணைக் காட்டுங்கள்" கல்கியின் தலையங்கம்,  எதிர்க்கட்சி நிலையில் இருந்தபோது...