0,00 INR

No products in the cart.

வளம் கொழிக்கும் வசந்த பஞ்சமி!

கோ.காந்திமதி

த்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி, ‘வசந்த பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இத்திருநாள், தென்னகத்தில் பெருவாரியாகக் கொண்டாடப்படாவிட்டாலும், வடமாநிலங்கள் பலவற்றிலும் விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. நமது ஊரில் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியின் ஒன்பதாம் நாளை சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகிறோம். ஆனால், வடநாட்டில் இந்த தினத்தை துர்கை வழிபாட்டுக்குரிய தினமாக கடைபிடிக்கிறார்கள். அதேபோல், தை மாதம் வரும் வளர்பிறை பஞ்சமி தினத்தை, சரஸ்வதி தேவியின் அவதார நாளாகவும் வழிபாட்டுக்குரிய தினமாகவும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ண்ட சராசரங்களையும் படைத்த பிரம்மாவுக்கு, அதில் ஏதோ ஒரு குறை இருப்பதாகத் தோன்றியது. காரணம், அவரது அனைத்துப் படைப்புகளும் ஓசை நயமின்றி அமைதியாக இருந்தன. இது, பிரம்மாவின் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கியது. அப்போது அவரது கமண்டலத்தில் இருந்து சில துளி நீர் கீழே சிந்தியது. அதிலிருந்து ஒரு அழகியப் பெண் வெளிப்பட்டாள். அவள்தம் கரங்களில் சுவடிகளையும் ஸ்படிக மாலையையும் மடியில் வீணையையும் தரித்திருந்தாள். சற்று நேரத்தில் அப்பெண் தனது கரங்களிலிருந்த வீணையை மீட்டத் தொடங்க, அதிலிருந்து தெய்வீக இசை தோன்றியது. அந்த இசையின் வாயிலாக பிரம்மாவின் படைப்புகள் அனைத்தும் ஓசை நயம் பெற்றன. அதோடு, கடலும், ஆறும், காற்றும் சத்தம் செய்து தங்களது இருப்பை வெளிப்படுத்தின. அதோடு, பிரம்ம சிருஷ்டியில் மகத்தானதான மனிதனும் பேச்சாற்றலைப் பெற்றான்.

இதைக் கண்டு மகிழ்ச்சியுற்ற பிரம்மா அந்தப் பெண்ணைப் பல விதத்திலும் போற்றியதோடு அவளுக்கு, ‘சரஸ்வதி’ என நாமகரணம் சூட்டி தமது நாவில் அமர்த்திக்கொண்டார். அப்படி பிரம்மாவின் கமண்டல நீரில் இருந்து சரஸ்வதி தேவி தோன்றிய திருநாளே வசந்த பஞ்சமி என்று சில புராணங்கள் சொல்கின்றன.

சந்த பஞ்சமி தினத்தை விமரிசையாக அனுசரிக்கும் வடநாட்டு மக்கள், இன்று புனித நதிகளில் நீராடி, சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர்களால் பூஜை செய்து வழிபடுகின்றனர். இன்று கலைமகளாம் சரஸ்வதியை வழிபட, அனைத்து கலைகளும் கைவசப்படுவதோடு, ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கலாம்.

அதேபோல், வாராகி வழிபாடும் இன்று விமரிசையாக நடைபெறுகிறது. நிலம் தொடர்பான பிரச்னைகள் தீர, பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்க இன்று விரதமிருந்து மாலையில் வாராகி அம்மனை வழிபட, அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும். ‘சுக்ல பஞ்சமி’ என்று அழைக்கப்படும் இத்தினத்தில் அம்மனை விரதமிருந்து வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும்.

மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற வடமாநிலங்களில் வசந்த பஞ்சமியில் சரஸ்வதி தேவி வழிபாடு பிரசித்தம். காஷ்மீர் மாநிலத்தில் வசந்த திருவிழாவாகக் கொண்டாடப்படும் இந்நாளில், மக்கள் மஞ்சள் நிற ஆடைகளையே அணிகின்றனர். அதேபோல், பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக்கப்பட்டு, எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறமாகவே காணப்படுகிறது. இன்று சரஸ்வதி தேவிக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களும், (லட்டு உள்ளிட்டவை) மஞ்சள் நிற நிவேதனமாகவே இருக்கும்.

மேற்கு வங்கத்தில், வசந்த பஞ்சமி தினத்தில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்குவது வழக்கமாக உள்ளது. இன்று குழந்தைகளின் முன்பு பென்சில், பேனா, சிறிய தொழில்நுட்பக் கருவிகளை வைப்பார்கள். அதில் இருந்து குழந்தை எதை எடுக்கிறதோ, அதில்தான் அவர்களின் ஆர்வமும், எதிர்காலமும் அமையும் என்ற நம்பிக்கை அவர்களிடையே நிலவுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தக் காலத்தில்தான் கடுகுச் செடிகள் மஞ்சள் நிறப் பூக்களைப் பூத்துக் குலுங்குகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டே மஞ்சள் நிறம் கடைபிடிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. குஜராத் மாநிலங்களில் இன்று இளைஞர்கள் பல வண்ணங்களில் பட்டங்களை காற்றில் பறக்க விட்டு மகிழ்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம், புஷ்கரில் உள்ள பிரம்மா சரஸ்வதி கோயில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயில், ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் ஆகிய தலங்களில் வசந்த பஞ்சமி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பகவான் கிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் கல்வி கற்க குருகுல வாசம் தொடங்கியது வசந்த பஞ்சமி தினத்தில்தான் என்று கூறப்படுகிறது. இன்று (5.2.2022) வீட்டில் சரஸ்வதி பூஜை செய்து வழிபட, வாழ்வில் வளமும் நலமும் பெருகுவதோடு, கல்வி செல்வமும் வளரும் என்பது ஐதீகம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...

அழைப்பவர் குரலுக்கு ஓடிவரும் அழகியசிங்கர்!

0
- டாக்டர் கங்கா பக்தவச்சலனான ஸ்ரீ மஹாவிஷ்ணு தன்னைப் பணிந்தவர்களை கால தாமதமின்றி காப்பதற்காக தூணிலும், துரும்பிலும் வியாபித்து இருக்கிறார் என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் நிலைநாட்ட வந்ததே நரசிம்ம அவதாரம். மனிதனா? சிங்கமா? என்று...

யோகத் திதிகள்!

- எம்.அசோக்ராஜா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மகரிஷிகளாலும், யோகிகளாலும், தபஸ்விகளாலும் கண்டுணர்ந்து சொல்லப்பட்ட பொக்கிஷம் திதிகள். வானில் தோன்றும் நட்சத்திரங்களை 27 ஆகப் பிரித்து, அவற்றை 12 ராசிகளுக்குள் அடக்கி, நகர்ந்து கொண்டிருக்கும் கோள்களின் நிலையைக்...

நலம் தரும் ஸ்ரீராம நாமம்!

- ராஜி ரகுநாதன் ஸ்ரீராமன் மானுட இனத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஆதரிசமான அவதாரம். மானுட இனம் எப்படி விளங்க வேண்டும் என்று வழிகாட்ட வந்த சாட்சாத் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ஆதரிசமாக எடுத்துக்கொள்ள வேண்டிய...

எளிய பரிகாரமும் ஏற்றமிகு பலன்களும்!

1
​உடல் நோய் தீர்க்கும் மிளகு தீப வழிபாடு! தீராத உடல் நோயால் அவதியுறுவது, உரிய வயதாகியும் திருமணம் கைகூடாமல் தடைபடுவது, திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்றி வருந்துவது, பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றால்...