வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு!

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு!

சென்னை விமான நிலையத்துக்கு நாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை, தனிமைப் படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

புதிய ஒமிக்ரான வைரஸைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்லன. அதன்படி சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, பிரேஸில், வங்கதேசம், போஸ்வானா, மொரீசியஸ், சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் விமான நிலைய வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் மற்றும் முடிவுகள் வெளிவரும் வரை விமான நிலைய வளாகத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தாலும், அப்பயணிகள் 7 நாட்களுக்கு வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் 7வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், சோதனை நேர்மறையாக இருந்தால் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலுள்ள மாநிலத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளை திரையிடுதல் மற்றும் சோதனை செய்வதற்காக தனி அலுவலர்களை நியமித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com