spot_img
0,00 INR

No products in the cart.

வேலூரில் இன்று நிலநடுக்கத்தால் மக்கள் பீதி: ரிக்டர் 3.6 ஆக பதிவு!

தமிழகத்தில் இன்று அதிகாலையில் வேலூர் அருகே ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் ஏறபட்டது.

இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவல்:

இன்று அதிகாலை 4:17 மணியளவில் தமிழகத்தில் வேலூர் அருகே ரிக்டர் 3.6 அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வேலூரில் இருந்து 59 கிலோ மீட்டர் மேற்கு தென்மேற்கு பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டு, சில நொடிகள் நீடித்தது.

இவ்வாறு தேசிய புவியியல் ஆய்வுமையம் தகவல் வெளீயிட்டுள்ளது.

வேலூரில் அதிகாலையில் இநத நிலநடுக்கம் கார்ணமாக வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் குவிந்தனர். ஆற்றல் குறைந்த நிலநடுக்கம் என்பதால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,140SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

தொல்லியல்துறை அறிஞர் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

0
தமிழகத்தின் முதுபெரும் தொல்லியல் துறை அறிஞர் நாகசாமி மறைவு தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனரும் முதுபெரும் தொல்லியல்...

திருப்பதிக்கு பாதயாத்திரை: 300-க்கும் அதிக தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் தர்ணா!

0
திருமலை திருப்பதி கோவிலுக்கு வேலூரிலிருந்து பாதயாத்திரையாக சென்ற சுமார் 300-க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அனுமதி மறுத்ததால், மலையடிவாரத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பக்தர்கள் சுமார் 500...

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக மக்கள் பேரணி!

0
அமெரிக்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியுமாறும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கட்டாயப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். வாஷிங்டன் நினைவிடம் முதல் லிங்கன் நினைவிடம்...

தேசிய கீதம் இசைக்கும் போது ‘சூயிங் கம்’ மென்ற விராட் கோலி: கிளம்பியது சர்ச்சை!

0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தேசிய கீதம் இசைக்கும்போது  சூயிங் கம் மெல்லும்  காட்சி வெளியாகி, கடும் சர்ச்சையும் கண்டனமும் ஏற்படுத்தி வருகிறது. .நேற்று (ஜனவரி 230 நடந்த தென்னாப்பிரிக்காவுடனான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி...

50-க்கும் மேற்பட்ட டால்பின்கள்; கன்னியாகுமரி அருகே கடற்கரையில் கரை ஒதுங்கி பரபரப்பு!

0
கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் திடீரென 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கி,...