விண்வெளியில் படப்பிடிப்பு: வரலாற்று சாதனை படைத்த ரஷ்யா!

விண்வெளியில் படப்பிடிப்பு: வரலாற்று சாதனை படைத்த ரஷ்யா!

ரஷ்யாவின் படக்குழு விண்வெளியில் படப்பிடிப்பை முடித்து, வரலாற்று சாதனை படைத்து பூமிக்கு திரும்பியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டுமே போட்டி போட்டு கொண்டு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில். விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுப்பது யார் என்பது குறித்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போட்டி நிலவிவந்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸை வைத்து விண்வெளியில் முதல் திரைப்படம் எடுக்க உள்ளதாக நாசாஅறிவித்து இருந்தது.

அதன்பின்பதாக இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரஷ்யா விண்வெளியில் படப்பிடிப்பு நடத்துவதற்கான தீவிரமுயற்சி எடுத்து வந்த நிலையில், ரஷ்யாவின் ராஸ்கோமாஸ் நிறுவனம் விண்வெளியில் எடுக்கப்படும் முதல் திரைப்படத்தின் பெயர் மற்றும் திரைப்படக்குழுவை கடந்த மே மாதம் அறிவித்திருந்தனர். சவால் என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிளிம்ஷிப்பென்கோ அவர்கள் இயக்குகிறார்.

யுலியாபெரெசில்ட் அவர்களை கதாநாயகியாக கொண்டு படப்பிடிப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. விண்வெளி வீரர் ஒருவருக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் பெண்மருத்துவர் விண்வெளிக்கு சென்று இந்த சவாலானபணியை எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் என்பதே அந்த படத்தின் கரு என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த படப்பிடிப்புக்காக கடந்த 5-ம் தேதி கஜகஸ்தானில் உள்ளபை கோனூர் நகரில் இருந்து சோயுஸ் எம்.எஸ்-19 எனும் விண்கலத்தில் நடிகை யுலியாபெரெசில்ட், இயக்குனர் கிளிம்ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளிவீரர் அன்டன்ஷகாப்லெரோவ் ஆகியோர் சர்வதேசவிண்வெளி நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் திட்டமிட்டபடி12  நாட்களில் ரஷ்யகுழுவிண்வெளியில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து, நேற்று மீண்டும் பூமிக்குத் திரும்பினர்.

.அந்தவகையில் விண்வெளியில் திரைப்படம் எடுத்த உலகின் முதல் நாடாகரஷ்யா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com