1. சமைக்காத காய்கறிகளையும் பழங்களையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் தான் நிறைய நார்ச்சத்து உள்ளது .கொழுப்பு கிடையாது .இயற்கையாக சேர்ந்த சர்க்கரையும் கிடையாது.
2. வயதான தாய் தந்தையர்கள் உங்களுடன் வாழ்கிறார்களா! சந்தோஷப்படுங்கள். ஏனென்றால் நீங்களும் நெடுநாள் வாழ்வீர்கள். அவர்களது மரபணு உங்களிடம் உள்ளதே!
3. மாடிக்குச் செல்லும் போது படிகளில் வசதியாக ஏறிச் செல்லுங்கள். உல்லாசமாக வெளியில் செல்லும்போது சைக்கிளில் செல்லுங்கள்.
4. அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்குத் தான் இதய நோய், வாத நோய், மூட்டு நோய், நீரிழிவு நோய் அதிகம் வருகிறது.
5. திரும்பத் திரும்ப வரும் நோய்களாகிய தலைவலி, வயிற்று வலி, மூச்சு விட முடியாமை ஆகியவற்றிற்கு உடனடியாக மருத்துவரை அணுகவும் .ஏனென்றால் பெரியதொரு மருத்துவத்தை தேவையில்லாமலாக்கலாம் .
6. உணவில் வேண்டிய அளவு கொழுப்பு தேவை. கொழுப்பு தான் சக்தி பாதுகாப்புக்கு அரணாகிறது. கொழுப்பு ஹார்மோனை ஒவ்வொரு இடத்திற்கும் எடுத்துச் செல்லும் வழிகாட்டியாக செயல்படுகிறது.
7. உணவில் வேண்டிய அளவு சர்க்கரை சத்து தேவை. அதுதான் சக்தியைக் கொடுக்கிறது. ஒவ்வொரு திசுவும் வேலை செய்த பின் திசுவில் உணவு கலக்க வேண்டும்.
8. அதிக எடை ஆபத்தானது அவர்களுக்குத்தான் புற்றுநோய், நீரிழிவு ,இதய நோய் ,குடல் இறக்கம் ஏற்படுகிறது.
9. வேண்டியளவு தாது சத்து இருக்க வேண்டும். அவை தான் உடம்பை வளர்க்கிறது. உடம்பில் ஏற்படும் தேய்மானத்தை சரி செய்கிறது. மற்றும் சக்தியை மற்ற உணவுப் பொருட்களில் இருந்து வெளிப்படுத்துகிறது.
10. குழந்தைகளுக்கு பழம், பச்சை காய்கறிகளும் கொடுத்து பழக்குங்கள். அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பழக்கமாகிவிடும்.
11. உணவில் வேண்டிய புரத (புரோட்டீன்)சத்து தேவை. புரோட்டின் தான் புது செல் உருவாவதற்கு தேவைப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு திசுக்களை புதுப்பிக்கவும், புது திசு வளரவும் புரதச்சத்து தேவை.
12. உடம்புக்கு சக்தி தரும் உணவு மாவு சத்தும், கார்போஹைட்ரேட்டும், கொழுப்பு சத்தும், புரதமும் ஆகும். மாவு சத்து அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றில் உள்ளது. கொழுப்புச்சத்து சர்க்கரை, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உள்ளது. கொழுப்பு பருப்பு ,கொட்டைகளில் நிறைய உள்ளது.
13. உடம்பில் கொழுப்பு அதிகமாக இருப்பதை தோலை வைத்து முடிவு செய்துவிடலாம். தோலின் தடிப்பு ஒரு அங்குலத்திற்கு அதிகம் இருந்தால் உடல் எடையை குறைக்க வேண்டும்.
14. காய்கறிகளையும் பழங்களையும் சமைக்காமல் உண்ணுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவற்றின் மணம், நிறம், கவரும் தன்மை கெடாமல் இருக்கும் .உயிர் சத்தும், தாது உப்பும் வீணாகாமல் கிடைக்கும். அதிலிருந்து ஏ சத்தும் கெடாது.
15. சிறு குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து குறைந்தால் பார்வை இழப்பு ஏற்படும் .உடலில் புற்றுநோய் பரவாமல் இருக்கவும் வைட்டமின் ஏ பயன்படுகிறது. வைட்டமின் ஏ முட்டையின் மஞ்சள் கருவிலும், பாலிலும் ,ஈரலிலும் அதிகம் உண்டு. அது போல் காய்கறியில் கேரட்டில் அதிகம் உண்டு.
மேற்கண்ட 15 குறிப்புகளை தவறாமல் நாம் பயன் படுத்தினால் நண்பர்கள், உறவினர்கள் நம்மை தொடர்பு கொள்ளும் போது கேட்கும் முதல் கேள்வியான நலம்தானா? என்ற கேள்விக்கு நலம் தான் என்ற பதிலை சந்தோசமாக கூறலாம்.