நாம் எதுபோன்ற உணவுகளை உண்கிறோமோ அதுதான் நம் ஆரோக்கியத்தை பெரிதளவில் பாதிக்கிறது. இதில் அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை கொண்ட உணவுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. அசிடிட்டி அதிகமாக இருக்கும் உணவுகளை நாம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நம் உடலின் pH அளவு பாதிக்கப்பட்டு பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசிட்டிக் உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
அசிடிட்டி என்றால் என்ன?
அசிடிட்டி என்பது ஒரு பொருளின் அமிலத்தன்மையை குறிக்கும் அளவு. நம் உடலில் பல செயல்பாடுகள் சரியாக நடைபெற pH அளவு சமநிலையில் இருப்பது அவசியம். அசிடிக் உணவுகள் உடலில் அதிக அமிலத்தை உற்பத்தி செய்து இந்த சமநிலையை சீர்குலைத்து விடும்.
அசிடிக் உணவு வகைகள்:
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள் விட்டமின் சி நிறைந்திருந்தாலும், அதிக அளவு சிட்ரிக் அமிலத்தைக் கொண்டுள்ளன. இது நம் pH அளவை அதிகரிக்கும்.
கோதுமை, அரிசி போன்ற தானியங்கள் அதிகமாக உட்கொள்ளும்போது உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கச் செய்யும்.
சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் உடலில் இன்சூரன்ஸ் சுரப்பை அதிகரித்து அமிலத்தை உற்பத்தி செய்யும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், செயற்கை இனிப்புகள் ஆகியவை அதிக அளவு சோடியம், பாஸ்பரஸ் கொண்டிருப்பதால் உடலின் அமிலத்தை அதிகரிக்கச் செய்யும்.
தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற சில வகை காய்கறிகளில் அசிடிக்தன்மை அதிகம் உள்ளதால, இவற்றை குறைத்துக்கொள்வது நல்லது. மேலும், மதுபானங்கள் உடலின் லாக்டிக் அமிலத்தை அதிகரித்து, மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
அசிட்டிக் உணவுகளால் ஏற்படும் தீமைகள்:
அசிடிட்டி வயிற்றுப்புண், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அமிலம் அதிகமாக இருப்பதால் உடல் எலும்புகளில் இருந்து கால்சியம் மற்றும் பிற தாதுக்களை எடுத்துக்கொள்ளும். இதனால், எலும்பு பலவீனம், எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அமிலம் தசைகளில் அதிகமாக படிந்து வலி மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்தும்.
அசிடிட்டி சரும வரட்சி, சொரி, பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். நீண்ட காலமாக அசிட்டிக் உணவுகளை உட்கொள்வதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற வளர்ச்சிதை மாற்ற கோளாறுகள் ஏற்படக்கூடும்.
எனவே, இத்தகைய உணவுகள் நம் உடலுக்கு பல்வேறு தீமைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அமிலத்தன்மை அதிகம் கொண்ட உணவுகளைக் குறைத்து காரத்தன்மையை அதிகரிக்க வேண்டும். இதற்கு, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தண்ணீர் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.