

1928 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் பிளமிங் என்பவர் பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தார். இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்களை இந்த மருந்தின் மூலம் குணப்படுத்த முடிந்தது. அதனால் இந்த மருந்தை மேஜிக் புல்லட் என அழைத்தனர். அதன் பிறகு பல வகையான ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மருந்துகளை பயன்படுத்தி தொற்று நோய்களை குணப்படுத்த முடிந்தது.
தங்கள் உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த இயற்கையாகவே உடம்பில் எதிர்ப்பு சக்திகள் இருக்கும். இன்று ஏகப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகள் (Antibiotic) உட்கொள்வதன் மூலம் நம் உடம்பில் வீரியமிக்க சூப்பர் பக்ஸ் எனப்படும் நுண்ணுயிர்கள் வளர தொடங்கி விட்டன.
2019ஆம் ஆண்டில் ஆண்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் திறன் உள்ள கிருமி தொற்றால் உலகம் முழுவதும் 4.95 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். மற்ற காரணிகளால் இறந்தவர்களை விட இது அதிகம் எனக் கூறப்படுகிறது.
நவீன மருத்துவம் தொழில் நுட்பமானதாக இருக்கலாம்.. திறமைமிக்க மருத்துவராக இருக்கலாம். வசதி வாய்ப்புகள் இருக்கலாம்.
ஆனால் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நோய் தொற்று ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய முடியும்.
உலக நுண்ணுயிர் எதிர்ப்பை கண்காணிக்கும் அமைப்பில் நம் நாடு 2019 ஆம் ஆண்டில் இணைந்துள்ளது. இந்த அமைப்பு நுண்ணுயிர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஆண்டிபயாடிக் பயன்பாட்டை முறைப்படுத்துவது, சுகாதாரத்தை பேணி பாதுகாப்பது போன்ற நெறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆண்டிபயாடிக் எதிர்ப்புகள் எவ்வாறு பரவுகிறது? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்? பெரும்பாலும் மருத்துவர் பரிந்துரைத்த பழைய மருந்து சீட்டுகளை காண்பித்து மருந்து வாங்கி தானாகவே சாப்பிடுவது அல்லது மருந்து கடையில் கேட்டு வாங்கி சாப்பிடுவது போன்ற பழக்கவழக்கங்கள் தவறான முன்னுதாரணமாக உள்ளன!
மருந்து அட்டையில் சிவப்பு கோடிட்ட மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது தவறு. மருந்து கடைகள் டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்குவது அதைவிட பெரிய தவறு. அவசியம் இல்லாமல் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
இவை நம் உடம்பில் நுண்ணுயிரிகளை உருவாக்க காரணமாகிறது. இவை தவிர ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்த படி முழுமையான அளவு எடுத்துக் கொள்ளாமல் அரைகுறையாக நிப்பாட்டுவது நுண்ணுயிர்கள் ஏற்பட காரணமாகிறது. இதன் மூலம் நுண்ணுயிர்கள் வீரியம் பெறுகின்றன.
ஆண்டிபயாடிக் மருந்துகளின் முறையற்ற பயன்பாடுகளை தடுப்பதற்கான சட்டத்தை கேரளா அரசு முன்னோடியாக உள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிலையம் நம் மாநிலத்திற்கான ஆண்டிபயாடிக் கொள்கையை வெளியிட்டுள்ளது. மருத்துவம் சாரா காரணங்களுக்காக ஆண்டிபயாடிக் மருந்துகளில் உபயோகத்தை தடுக்க சட்டங்கள் இருந்தாலும் அவை முழுமையாக நடைமுறையில் இல்லை என்பதே உண்மை.