அழகோடு, ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? இதைத் தவிர்த்திடுங்கள்!

அழகோடு, ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? இதைத் தவிர்த்திடுங்கள்!

ங்கள் உடல் எடை திடீரென அதிகரித்து வருகிறதா? நீங்கள் வயதான தோற்றத்துடன் காட்சியளிக்கிறீர்களா? இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை? கவலையை விடுங்கள். உங்கள் உணவில் சர்க்கரையை இரண்டு வாரம் தவிர்த்துப் பாருங்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உங்களாலேயே உணர முடியும்.

உணவில் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் உடல் நலனில் நம்ப முடியாத மாற்றங்களைக் காணலாம். சர்க்கரை உடலுக்கு அதிக சக்தியை வழங்கினாலு,ம் அதில் அதிக கலோரிகள் உள்ளன. சர்க்கரையை அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் அது கொழுப்பாக மாறி, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் மூளை சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

பிரட், பிஸ்கெட், கேக், மிட்டாய், ஐஸ்கிரீம், குக்கீஸ், சோடா, சர்க்கரை கலந்த காபி மற்றும் இதர பானங்களைத் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்தால் உடல் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். சருமத்தில் பளபளப்பு ஏற்படுவதோடு, சுருக்கங்கள் மறைந்து இளமையாகக் காட்சியளிப்பீர்கள்.

சர்க்கரையை தவிர்த்தால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். உடல் எடை குறையும். சிறுநீரக செயல்பாடும் நன்றாக இருக்கும். சர்க்கரையை தவிர்த்து ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். அதிக சர்க்கரை உங்களுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தும். சர்க்கரையை தவிர்த்தால் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com