
ஒருமுறை காந்திஜியும் கஸ்தூரிபாயும் திருமணம் ஒன்றிற்கு போயிருந்தனர். அண்ணல் தம்பதியினரைப் பார்த்ததும் மணமக்கள் ஓடிவந்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். அதுசமயம் மணமகளின் சகோதரன் ஓடிவந்து அன்னை கஸ்தூரி பாயிடம் சில நகைகளைப் பரிசளித்தான். அவற்றை வாங்கிக் கொள்வதா வேண்டாமா? என்று புரியாமல் அண்ணலை நோக்கினாள். அண்ணலும் அதை வாங்கிக் கொள்ளுமாறு தலையை அசைத்தார். அடுத்த வினாடியே "இந்த நகைகளை ஏழை முஸ்லிம்கள் நிவாரண நிதியில் சேர்த்து விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அண்ணல் புன்னகைத்தபடியே "கஸ்தூரி உன் பரீட்சையில் நீ வென்றாய். உன்னை நாடு போற்றும்" என்றார்.
அண்ணல் காந்திஜியின் முத்தான பத்து பொன்மொழிகள்
எத்தனை முறைப் படித்தாலும் போதாது பிடித்ததைப் பின்பற்றுவோம்.
* தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.
* தற்பெருமை எங்கு முடிவடைகின்றதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது.
* பலம் என்பது உடல் அளவைப் பொற்த்தது அல்ல, மன உறுதியைப் பொறுத்தது.
* பொறுமையும், விடாமூயற்சியும் மலைகளைக்கூட தகர்த்துவிடும்.
* மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை, பிறருக்குக் கொடுப்பதில்தான் இருக்கிறது.
*தீயதைப் பார்க்காதே. தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே.
* நாம் உண்மையாக வாழ்வது என்றால் நம் கடமையை செய்வது என்றுதான் அர்த்தம்.
* எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்து விடலாம். ஆனால் அதை ஒரு அறிவாளியால்தான் காப்பாற்ற முடியும்.
* செலவழிக்கும் பணத்துக்கு கணக்கு எழுதி வை. செலவழித்தது அவசியம்தானா என்று சிந்தித்துப் பார். சிக்கனம் தானாகவே வந்துவிடும்.
* நல்ல இருட்டிற்குப் பிறகே ஒளி பிரகாசிக்கிறது.துக்கத்தை அனுபவித்த பிறகே சுகம் தெரிகிறது.