0,00 INR

No products in the cart.

அடையாளம் காண்போம்!

ஆர்.வி.ஆர்.

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது, சிங்கம் ஒன்று பசியோடு அங்கு அலைவதைப் பார்த்த நாய், ‘இன்றோடு நம் கதை முடிந்தது’ என்று எண்ணியது.

அப்பொழுது அங்குக் கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும், நாய் ஒரு திட்டம் தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு, எலும்பு துண்டுகளை சுவைக்கத் தொடங்கியது. சுவைத்துக்கொண்டே சத்தமாக, “சிங்கத்தைக் கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது. ஆனால், வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்” என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம், “அய்யோ…! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது” என்று நினைத்து பயந்து, அங்கிருந்து ஓடிப்போனது. இதையெல்லாம் மரத்தின் மீது இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. ‘சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை, சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால் சிங்கத்தின் நடப்பைப் பெற்று வாழ்நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம்’ என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றிச் சொன்னது. அதை கவனித்த நாய், ஏதோ தப்பு நடக்கப்போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, “இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்” என்று கூறி, குரங்கை தனது முதுகில் சுமந்தபடி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

மீண்டும் தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, “இந்தக் குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே” என்று உரக்கக் கூறியது.

இதைக் கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. நம்மைச் சுற்றியும் பல குரங்குகள் இருக்கலாம். அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

0
ஆலயம் கண்டேன் - ஸ்வாமி தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில்...

பலிபீடத்தைத் தொட்டால் தோஷமா?

0
அறிவோம் தெளிவோம் - கவிதா பாலாஜிகணேஷ் எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை வழிபட வேண்டும். பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை...

பரமேஸ்டிக்கு அருளிய பரந்தாமன்!

0
அருளாடல் - ஸ்ரீதர் பூரி திருத்தலத்தில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்து வந்தார். புற அழகில் அவலட்சணமான கூன்முதுகர். ஆனால், அக அழகில் ஸர்வ லஷ்ணத்துடன் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தர்! தையற்...

வாழ்வின் அர்த்தம்!

0
படித்ததில் பிடித்தது - ஏ.எஸ்.கோவிந்தராஜன் போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர்...

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

0
ஆலயம் கண்டேன் - ஆர்.வி.பதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும்....