online@kalkiweekly.com

spot_img

அதிர்ச்சி வைத்தியம் தேவை

தராசு பதில்கள் / நீங்கள் கேட்டவை

உச்ச நீதிமன்ற மின் அஞ்சல்களில் இடம் பெற்றிருக்கும் பிரதமர் படத்தை நீக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறாரே? – நந்தினி திருவனந்தபுரம்.

விளம்பர விரும்பியான நமது பிரதமரை திருப்திப்படுத்த பா.ஜ.க. கட்சி யினர் மட்டுமல்ல, ஒன்றிய அரசில் பல அதிகாரிகளும் இம்மாதிரியாகச் செயலாற்றுகின்றனர். கண்டிக்கவேண்டிய பிரதமரும் கண்டு கொள்வ தில்லை. கொரோனா தடுப்பூசி சான்றில்கூட பிரதமர் படமிருக்கிறது.

(இறப்புச் சான்றிதழில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.)

அரசு அலுவலகங்களின் மின் அஞ்சல்களை நிர்வகிக்கும் தேசிய தகவல் மையம்தான் உச்ச நீதிமன்றத்துக்கு அந்த வசதியை வழங்கியிருக்கிறது. அதில் பிரதமர் மோடியின் புகைப்படம், சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற வாசகம் இருக்கிறது. அதைத்தான் நீக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதில் புரியாத விஷயம், கடந்த சுதந்திர தினத்திலிருந்து, இருக்கும் இந்த வாசகங்கள் இதுவரை யார் கண்ணிலுமா படவில்லை?

பி.எம்.கேர்ஸ் நிறுவனம் தொண்டு நிறுவனமா? – மஹாலட்சுமி திருச்சி

அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிராமணப் பத்திரத்தில் இது தொண்டு நிறுவனம். ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அரசின் தணிக்கைகள், தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் வராது என்று சொல்லியிருக்கிறார்கள். உலகிலேயே நாட்டின் பிரதமர் பெயரில் வெளிப் படைத் தன்மை இல்லாமல் இயங்கும் தொண்டு நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும்.

தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், ஒரே இரவில் 2000க்கு மேல் ரவுடிகள் பிடிபட்டுள்ளது பற்றி? – ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

ஆண்டுக்கு ஒருமுறை இதைத் திருவிழா போல நடத்துகிறார்கள். ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. ஆனால் அப்புறம் இவர்கள் என்ன ஆகிறார்கள். எத்தனை வழக்கு? எத்தனை கைது என்ற விவரங்கள் வருவ தில்லை.

இந்தியர்கள் இங்கிலாந்துக்கு வரத் தடை விதித்திருக்கிறதாமே? – சண்முகநாதன், ஈரோடு.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவரும் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா, தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சில உலக நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடை செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இங்கிலாந்து செல்லும் தேதியிலிருந்து 10 நாட்கள் முன்புவரை இந்தியாவில் இருந்திருக்கக்கூடாது. இந்தியாவிலிருந்து வேறு நாட்டிற்குச் சென்று, அங்கு 10 நாட்கள் இருந்துவிட்டு இங்கிலாந்து செல்ல லாம். இந்தத் தடை இங்கிலாந்தில் மட்டுமில்லை, அமெரிக்க உள்பட பல நாடுகளில் இருக்கிறது.

`தமிழக அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்ததாக’ முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளாரே? – கண்ணன், நெல்லை.

எதில் என்று சொல்லவில்லையே?

கடவுளின் மகிமையைக் கூறும் புத்தகங்களைக் கூறுங்களேன்? -நெல்லை குரலோன்.

தெய்வத்தின் குரலைவிட வேறு புத்தகம் வேண்டுமா என்ன?

சில பிரபலங்கள் முகமூடி அணிந்து வெளியே வருவதன் நோக்கம் என்ன? – உஷா முத்துராமன், திருநகர்.

தாங்கள் பிரபலங்கள் என்று அவர்கள் நம்புவதைக் காட்டிக்கொள்ளத்தான்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடியாகப் பேசுகிறாரே? – காஜா மொஹைதீன், திண்டுக்கல்.

மதிப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படித்து, பன்னாட்டு நிறுவ னங்களில் பணிபுரிந்த அனுபவங்கள் பெற்ற ஒரு நிதியமைச்சர் இப்படி பேசுவது அழகல்ல. அவருக்கு தெய்வப் புலவனின் ‘நா காக்க’ என்ற வாசகம் மறந்துபோனது வருத்தமாக இருக்கிறது. அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்கிறது அறிவாலயத்தில் ஒரு குழு.

வீரமணி நண்பா் வீட்டில் ரெய்டு நடந்துள்ளதே? – ஆா்.நாகராஜன் செம்பனார்கோவில்.

அவர் நண்பர்களை நம்புபவர் எனப் புரிகிறது.

புதிய ஆளுநா் ஜனாதிபதியைச் சந்தித்திருக்கிறாரே? – சந்திரிகா பெங்களூரு.

பதவி ஏற்ற பின்னர் ஆளுநர்கள் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமரைச் சந்திப்பது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நடை முறை. சில பத்திரிகைகள் இதற்குக் காரனம் கற்பித்து செய்தி வெளி யிட்டிருப்பது அபத்தம்.

மின்னிதழ், மின் இணைப்பு என்ன வித்தியாசம்? – ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

முன்னது கிடைப்பது எளிது. பின்னது கிடைக்கக் காத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு இணைப்புக்களுமே பலனளிக்கக் கூடியது.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

ஊழலும் ஹைடெக்காகிவிட்டது

1
நீங்கள் கேட்டவை / தராசு பதில்கள்   ? இந்த ஹை டெக்னாலஜி யுகத்திலும் ஊழலுக்கு குறைவில்லையே? - நெல்லை குரலோன், பொட்டல்புதூர் ! ஊழலும் ஹை டெக்காக ஆகிக்கொன்டிருக்கிறதே.  இந்த இதழ் கவர் ஸ்டோரி பார்த்துவிட்டீர்களா? ?  முதல்வர்...

தராசு பதில்கள்

0
முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய செயல்பாடுகளில் மிகவும் பிடித்தது? - நெல்லை குரலோன், பொட்டல்புதூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல் கல்லூரிகளில் 7.5 % ஒதுக்கீடு முறை மூலம் இடங்களை வழங்கும் விழாவிற்குச் செல்லும் முன் அப்படி ...

வானில் ஒலித்த பாரதியின் பாடல்கள்

0
பாரதி நினைவு நாள் நூற்றாண்டு சாந்தி ஜெகத்ரட்சகன் செப்டெம்பர் 18, காலை 5 மணி. பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மையம் திடும் மென்று குழந்தைகளின் குரலில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன....

400 ஆண்டுகால வியாபாரம்

0
வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும் சோம.வள்ளியப்பன் பங்குச்சந்தை ஒரு வகை சூதாட்டம் தானே! பத்திரிகைகள் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரைகள் எழுதுவதாகவும் அறிகிறேன். பங்கு சந்தை கள் ஏன், எப்படி, எங்கு. என்று தோன்றின?   - திருவரங்க வெங்கடேசன்,...

ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்-15 எஸ்.சந்திரமௌலி "டைரக்டர் ஷங்கர் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு மக்களைக் கவரும் வகையில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் எடுக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்டி அவர் மக்களை மிரட்டிவிடுகிறார். அதனால் அவரது படங்கள்...
spot_img

To Advertise Contact :