0,00 INR

No products in the cart.

அது ஒரு கனாக்காலம்!

மூன்று வாரத் தொடர்

ஜெயராமன் ரகுநாதன்

இன்றைய சென்னை, அன்றைய மெட்ராஸ்தான் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடிகோலியது! இந்த மெட்ராஸ் மாகாணம் பதினேழாம் நூற்றாண்டில் தன் எல்லைகளை மாற்றியபடியே இருக்க வேண்டியதாயிற்று. காரணம் சுற்றுவட்டார ஹிந்து மற்றும் முஸ்லிம் அரசுகள் மெட்ராஸை, முக்கியமாக ஐரோப்பியர்களைத் தாக்கியவண்ணம் இருந்தன. ஒவ்வொரு தடவையும் தாக்குதல், சண்டை, தோல்வி, வெற்றி என்று மாறி மாறி நிலப்பரப்பை இழந்தும் பெற்றும் அல்லாடியது, கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுமையிலிருந்த அன்றைய மெட்ராஸ்.

லோக்கல் நாயக்கர்களிடமிருந்து பல ஊர்களின் உரிமையைப் பெற்றுக்கொண்ட கிழக்கிந்திய கம்பெனி தம் வியாபார மற்றும் அந்தப் பகுதிகளை நிர்வாகம் செய்ய கவர்னர்களை இங்கிலாந்திலிருந்து அனுப்பியது. பிரிட்டிஷ் கவர்னர்கள் வந்து ஆட்சி செய்ய முன்னேற்றம், அவ்வப்போது ஏற்படும் தடைகளினூடே தொடர்ந்தது. எலிஹு ஏல் (Elihu Yale) என்னும் கவர்னரின் காலத்தில்தான் பல நூறு பிரிட்டிஷாரும், போர்ச்சுக்கீசியரும் டச்சுக்காரர்களும் வந்து வியாபாரத்தில் கொழித்தனர்.

1687இல் கோல்கொண்டாவை வெற்றிகொண்ட பிறகுதான் வியா பார முன்னேற்றங்கள் எல்லாம் மெட்ராஸில் தொடங்கின. இந்த வெற்றிக்குப் பிறகு தில்லி முகமதிய சுல்தான் பிரிட்டிஷாருக்கு கிழக்கிந்திய கம்பெனி மூலம் தனியுரிமைப் பட்டயம் அளித்துவிட பிறகுதான் மெட்ராஸ் நிம்மதிப் பெருமூச்சுடன் வர்த்தகத்தில் மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கியது.

ஆரம்பம் என்னவோ சுமுகமாக இல்லையென்றாலும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கங்கள் இருக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு தினசரி எழுந்து, காபி சாப்பிட்டு பேப்பர் படித்து வம்பு பேசி கோவிலுக்குப் போய் என்று தினசரி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். மாமியார், மருமகள் சண்டை, அடுத்த வீட்டுக்காரனுடன் அலப்பறை, வாசலில் வரும் வியாபாரியுடன் பேரம், திண்ணையில் சக தெருவாசிகளுடன் கிரவுன் பிராஸிக்யூட் டர் அன்றைய கொலை கேஸில் என்ன வாதாடினார் போன்ற ஊர் வம்படிச் செய்திகள் என்று தினப்படி வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது.

“பேராண்டி! அந்தக் காலத்துல நானெல்லாம் ஒரு ரூவா எடுத்துட்டு போனா ஒரு படி அரிசி, அரப்படி பருப்பு, காலிட்டர் எண்ணெய், துணிக்கு சவுக்காரம், கூடவே ஒரு கடலமிட்டாய் வாங்கிக்கினு வருவேன், தெரியுமா?”

“தாத்தா! இப்பல்லாம் கடையில கேமரா வெச்சுட்டானுங்க! அப்டில்லாம் எடுத்துட்டு வர முடியாது!”

இந்தத் தலைமுறைக்கு தாத்தா தப்பேதும் செய்யாமல் நியாய மாகவே அவையெல்லாம் வாங்கி வருவார் என்பது தெரியவே இல்லை!

விலைவாசி என்று நான் இங்கே பொருளாதாரம் பேசப்போவ தில்லை. அதேபோல இது ஏதோ பெருசு பழங்கதை பேசும் கட்டுரை இல்லை. பேராண்டியிடம் மேற்சொன்ன தாத்தா சொல்லுவது விலை வாசி மட்டுமில்லை. இப்போது அவர் இழந்துவிட்ட பல ரம்மியமான விஷயங்களும் அவற்றில் இருக்கும் சுவாரஸ்யங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான பார்வைதான் இந்த வியாசம்.

உங்களில் பலருக்கு “இப்படியெல்லாம் கூட இருந்ததா?” என்று நம்புவதற்கே கஷ்டமாக இருக்கும் சமாச்சாரங்களும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

நான் கீழே தரப்போகும் ஐட்டங்கள் பற்றி நீங்கள் கேள்விப்படா திருந்தால் நிச்சயம் உங்கள் வயது முப்பதுக்குக் கீழேதான் என்று உத்தரவாதமாகச் சொல்லுவேன்!

சன்லைட் சோப், லைஃப்பாய் சோப் (படு சுவாரஸ்யமான பின்னணி!), டெண்ட் கொட்டகை தியேட்டர் சினிமா, கோலி வைத்த பன்னீர் சோடா, கண்ணாடி பாட்டிலில் தினசரி பால், பார்க்கில் மற்றும் பீச்சில் லௌட் ஸ்பீக்கர் வைத்துப் பாட்டு, ஒரு ஸ்டேஷன் விடாமல் நின்று நின்று போகும் பாசஞ்சர் ரயில் பிரயாணம், சென்னையிலிருந்து மாயவரத்துக்குத் தொடர்புகொள்ளத் தேவைப் படும் ஒரு வாரம், ஹோட்டலில் தரையில் நீளப்பாய் விரித்து சாப்பாடு, லஸ் கார்னரில் இருந்து பீச் ஸ்டேஷன் வரை ஓடும் டிராம் வண்டி.

“நான் பார்க்காததா? இப்படித்தான் தொள்ளாயிரத்து அறுபதுல…” என்று ஆரம்பிப்பவரா நீங்கள்?

உடனே விலகுங்கள்! இந்தக் கட்டுரை உங்களுக்கல்ல! “அடடே! ஆமாம் சார்! சன்லைட் சோப்புல ஒரு வாசனை வருமே..” என்பவரானால் வாருங்கள்! ஒரு நடை பின்னோக்கி சுவாரஸ்யப் பயணம் ஒன்று போகலாம்! மற்றபடி எண்பதுக்குப் பிறந்த எல்லோருமே படித்து நுங்கலாம்!

(தொடரும்)

 

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

வானமும் வசப்படும்

0
பயணம் ஹர்ஷா விண்வெளிப் பயணம் செய்ய கடுமையான தேர்வுகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னர்தான் வீரர்கள் அனுப்பப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகப் பொது மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வர்த்தகரீதியான பயணத்தைத் தொடங்க ரிச்சர்ட்...

உள்ளாட்சித் தேர்தல்களும் உடையும் கூட்டணிகளும்

0
கவர் ஸ்டோரி ஆதித்யா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அரசியல் கட்சிகள் இடம் மாறி புதிய கூட்டணிகள் உருவாவது தமிழக அரசியலில் வாடிக்கை. ஆனால் இம்முறை கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன. தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது...

மென்பேனாவில் எழுதுங்கள்…

0
புதிய படைப்புகளைப் படைக்கலாம். கல்கி, ‘மென்பேனா’ மூலம் உங்கள் படைப்புகளை உடனுக்குடன் கல்கி ஆன்லைன் மின்னிதழில் பதிவு செய்யலாம். www.kalkionline.com இணையதளத்தில் மென்பேனா பகுதியில் உங்கள் படைப்புகளைப் பதிவேற்ற : 1. www.kalkionline.com இணையதளத்தில் Sign in...

இனியொரு விதி செய்வோம்

0
தலையங்கம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகப் பெரிய தொழிற்சாலைகள் தமிழ் நாட்டுக்கு வரவேண்டும். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, வரி வருவாய், புதிய வேலை வாய்ப்புகள் உயரும் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து...

அருள்வாக்கு

0
பாலாபிஷேகம் அல்ல; பாலபிஷேகம் ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும்....