0,00 INR

No products in the cart.

 ‘அனபெல் சேதுபதி’ பேய்ப் படம் அல்ல!

டைரக்டர் பேட்டி

ராகவ்குமார்

நேர்காணல் : தீபக் சுந்தர்ராஜன்

தமிழ் சினிமாவில் டைரக்டர் வாரிசுகள் எல்லாம் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்க, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்கு நரும் நடிக்கருமான ஆர். சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் தந்தையைப் போலவே டைரக்டராக அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் சேதுபதி, டாப்சியை வைத்து ‘அனபெல்லா சேதுபதி’ என்ற படத்தை இயக்குகிறார். தனது முதல் டைரக் ஷன் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

நடிக்க சான்ஸ் கிடைக்கறதுதானே சினிமாவில் கஷ்டம். அப்பா டைரக்டராக இருந்தும் ஏன் நடிக்கவில்லை?

“எனக்குத் தெரிஞ்ச ஒரு விஷயத்தை கதையாக மாற்றி திரைக் கதை வடிவம் தந்து அந்த ஸ்கிரிப்ட்டில் நிறைய பேரை நடிக்க வைக்கத்தான் எனக்கு விருப்பம் அதிகம். எனவே டைரக் ஷன் துறையை தேர்ந்தெடுத்தேன். அவருக்கான கேரக்டர் வரும்போது கண்டிப்பாக அவர் இடம் பெறுவார்.”

உங்கள் அப்பா அந்த நாட்களிலேயே யாரிடமும் உதவியாள ராக இல்லாமல் படம் இயக்கியவர். தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் ஏன் உதவி இயக்குநராக இருந்து டைரக் ஷன் செய்ய வேண்டும்?

“குரு இல்லாத வித்தை பலன் தராது என்பார் என் அப்பா. எந்த ஒரு கலையாக இருந்தாலும் குரு மூலமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என என் அப்பா விரும்பியதால் உதவி இயக்குநராகச் சேர முயற்சி செய்தேன். அப்பாவின் பேரைப் பயன்படுத்தாமல் பலரிடம் முயற்சி செய்தும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்க வில்லை. பிறகு அப்பாவின் சிபாரிசு மூலமாக டைரக்டர் விஜயிடம் உதவியாளராகச் சேர்ந்தேன்.”

ஆர்.சுந்தர்ராஜன் பல குடும்பக் கதைகளைப் படமாக்கி வெற்றி பெற்றவர். உங்கள் முதல் படம் ஏன் பேய்ப் படமாக உள்ளது?

“எனக்கு பேண்டசி சினிமா மீது காதல் அதிகம். அனைவரும் விரும்பும் ஜனரஞ்சகமான படங்களைத் தருவதில்தான் எனக்கு விருப்பம் அதிகம். கே.எஸ்.ரவிகுமார் சாரும், சுந்தர்.C. சாரும் என் மானசீக குருநாதர் கள். அப்பாவின் அனைத்துப் படங்களும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, ‘ராஜாதிராஜா’ மிகவும் பிடிக்கும். கற்பனை கலந்து அனைவரும் குடும்பத் துடன் பார்க்க வைக்கும் படங்கள்தான் என் சாய்ஸ். ‘அனபெல்  சேதுபதி’ பேய்ப் படம் கிடையாது. இந்தப் படத்தில் பேய் ஒரே ஒரு காட்சியில்தான் வருகிறது. வித்தியாசமான காமெடிப் படம் அனபெல் சேதுபதி. ராஜஸ்தா னில் உள்ள அரண்மனையில் நடக்கும் கதை இது.”

படத்தின் தலைப்பில் சேதுபதி இருப்பது நாயகன் விஜய் சேதுபதியை திருப்திப்படுத்தவா?

“நிச்சயமாக இல்லை. படத்தின் நாயகன் பெயர் வீர சேதுபதி. நாயகி டாப்சியின் பெயர் அனபெல். கதையை எழுதும்போதே டாப்சி மனதுக்குள் வந்துவிட்டார்.

உங்கள் அப்பாவின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. உங்களைப் போன்ற இளைய தலை முறை டைரக்டர்களுக்கு மியூசிக் டைரக்டர்கள் பங்களிப்பு உள்ளதா?

“எனக்குப் பிடித்த இசை ராஜா சாரின் இசைதான். இன்றைய தினத் தில் பாடல்களைவிட பின்னணி இசை மிக முக்கியமானது. என் படத்தில் மியூசிக் டைரக்டர் படத்தின் போக்கை உணர்ந்து பின்னணி இசை அமைத்துள்ளார்.”

யதார்த்தமான மண் சார்ந்த படங்கள் வந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் மறுபடியும் கமர்சியல் வட்டத்துக்குள் தள்ளுவது நியாயமா?

“என் அப்பா ஜாதி, மதம், கடவுள் இல்லை என்று சொல்லி வளர்த் தார். என் பாட்டியும், அம்மாவும் ஜாதி, மதம் இல்லை. கடவுள் மட்டும் இருக்கிறார் என்று சொல்லி வளர்த்தார்கள். எனவே மண் சார்ந்த ஜாதி, மதம், சமூகப் பின்னணி கொண்ட படங்களை நான் எடுப்பது கடினம் தான். உலகம் முழுவதும் கமர்சியல் சினிமாவிற்கு மதிப்பு இருக்கத் தான் செய்கிறது. எனவே என் பாதை வர்த்தகப் படங்கள்தான்.”

சினிமாவில் அப்பாவிற்குப் பிறகு முக்கிய நபராக யாரைச் சொல்லுவீர்கள்?

“என் மனைவி பவித்ராதான். ‘சூரரைப் போற்று’ படம் உட்பட பல படங்களுக்கு எக்சிகுடிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 2014 முதல் என் இந்த முதல் படம் வரை மனைவியின் பங்களிப்பு முக்கிய மானது.”

உங்கள் முதல் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது வருத்தம் அளிக்கவில்லையா?

“கண்டிப்பாக இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகு சினிமா டி.வி. யும் தியேட்டருமாகப் பயணம் செய்தது. தற்போது தியேட்டரும் ஓ.டி.டி யும் எனப் பயணம் செய்கிறது. கால மாற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தவிர்க்க இயலாதது.”

 

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....